சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்பட உள்ள ஏசி மின்சார ரயிலுக்கு 12 நிறுத்தங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேக்காக 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதன்பேரில், முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு பிப்ரவரி 3-வது வாரத்தில் வழங்கப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேர், நின்றுகொண்டு 3,798 பேர் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் எப்போது இயக்கப்படும், கட்டண விவரங்கள் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த ரயில் இயக்கப்படும் நேரம், நிறுத்தம் தொடர்பாக ரயில்வே போக்குவரத்து பிரிவின் ஒரு பரிந்துரை வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.
» சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1,032 கோடி ஒதுக்கீடு
» டி20 தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா 2-ம் இடத்தில் நீடிப்பு
சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00, பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு காலை 7.48, மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.35, மாலை 5.25 மணிக்கும் சென்றடையும். இரவு 7.35 ரயில் சேவை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் சென்றடையும்.
புறநகர் பாதையில் செல்லும்போது, கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். அதன்படி, அதிகாலையில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்கு வரும்போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு செல்லும்போதும் புறநகர் பாதையில் இயக்கப்படும்.
பிரதான பாதையில் செல்லும்போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 நிலையங்களில் நி்ன்று செல்லும். திங்கள் முதல் சனி வரை இந்த ரயில் சேவை இயக்கப்படும். இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
21 hours ago