ராமேசுவரம்: கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14 வெள்ளி மற்றும் மார்ச் 15 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மார்ச் 12 முதல் கடலுக்குச் செல்வதற்கு மீன்வளத் துறையினர் தடை விதித்திருந்தனர். இதனால் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனும் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். பாம்பன் மற்றும் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago