14 ஆண்டுகளாக லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பழநி முருகன் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்

கடந்த 14 ஆண்டுகளாக பழநி மலைக் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய முருகன் உற்சவர் சிலையை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று ஒப்படைக்க உள்ளனர்.

பழநி மலையில் தண்டாயுதபாணி கோயிலில் போகர் என்ற சித்தரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷானத்தால் ஆன இந்த சிலை ஐந்தாயிரம் ஆண்டு பழமையானது எனக் கூறப்படுகிறது.

இச்சிலையைப் போலவே மூன்றரை அடி உயரத்தில் புதிய உற்சவர் சிலை 2004-ல் மூலவர் சிலைக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. உற்சவர் சிலை சில மாதங்களிலேயே கருத்துப் போனதால் அச்சிலை அந்த ஆண்டே அகற்றப்பட்டது.

ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை முறைகேடு வழக்கில் ஸ்தபதி முத்தையாவை விசாரித்தபோது பழநி கோயில் சிலை முறைகேடு குறித்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து பழநி கோயில் இணை ஆணையராகப் பணிபுரிந்த கே.கே.ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, கோயில் துணை ஆணையராகப் பணிபுரிந்த புகழேந்தி, அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அந்த சிலையை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். கடந்த 14 ஆண்டுகளாக பழநி மலைக் கோயிலில் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் பாதுகாப்பு பகுதியான ‘டபுள் லாக்கரில்’ வைக்கப்பட்டிருந்த அந்த சிலையை ஒப்படைக்கும் முன்பு, கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடந்தது.

இதுகுறித்து கோயில் ஊழியர்கள் கூறும்போது, உற்சவர் சிலைக்கு தொடர்ந்து ஒரு வேளை பூஜை செய்யப்பட்டு வந்ததால் இதை அப்படியே அனுப்ப முடியாது. ஆகம விதிகளின்படி சிலைக்கு உரிய சக்தியை இறக்கிவிட்டு வெறும் சிலையாக மட்டுமே தரமுடியும். இதற்காகவே யாகம் நடத்தப்பட்டது என்றனர்.

இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான போலீஸார் நேற்று பழநி வந்தனர். அவர்கள், சிலையை இன்று கும்பகோணம் கொண்டு செல்வர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்