விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

அரசுப் பள்​ளி​யில் ஆசிரியர் தாக்​கிய​தால் பாதிக்​கப்​பட்ட மாணவர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதையடுத்து, மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

விழுப்​புரம் மாவட்​டம் கோலியனூர் அரு​கே​யுள்ள வி.அகரம் கிராமத்​தில் அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்​பள்​ளி​யில் நேற்று முன்​தினம் 6-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், தன்​னுடன் பயிலும் சக மாணவி ஒரு​வருடன் சண்​டை​யிட்​டு, கையால் அடித்​துள்​ளார். இதைக்​கண்ட உடற்​கல்வி ஆசிரியர் செங்​கேனி சண்​டையை தடுத்து நிறுத்​தி, அந்த மாணவரை அடித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

பின்​னர், அந்த மாணவர் வாந்தி எடுத்​து, மயங்கி விழுந்​துள்​ளார். உடனே பள்​ளி​யில் இருந்த ஆசிரியர்​கள் அந்த மாணவரை அரசமங்​கலம் ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். அங்கு முதலுதவி அளிக்​கப்​பட்ட பின்​னர், முண்​டி​யம்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் மாணவர் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். பின்​னர், மேல்​சிகிச்​சைக்​காக புதுச்​சேரி ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்டார்.

பள்ளி முற்றுகை... இந்​நிலை​யில், மாணவரைத் தாக்​கிய உடற்​கல்வி ஆசிரியர் செங்​கேனி மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மாணவரின் பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் 60-க்​கும் மேற்​பட்​டோர் வி.அகரம் அரசு உயர்​நிலைப் பள்​ளியை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தகவலறிந்த வளவனூர் போலீ​ஸார் அங்கு சென்​று, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதையடுத்து, விழுப்​புரம் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் அறிவழகன், சம்​பந்​தப்​பட்ட பள்ளிக்கு நேரில் சென்​று, பாதிக்​கப்​பட்ட மாணவரின் உறவினர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். மேலும், பள்​ளி​யில் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​களிடம் விசா​ரணை மேற்​கொண்​டார்.

போலீஸார் வழக்கு பதிவு: தொடர்ந்​து, மாணவரைத் தாக்​கிய உடற்​கல்வி ஆசிரியர் செங்​கேனியை பணி​யிடை நீக்​கம் செய்​தும், பள்​ளி​யின் தலைமை ஆசிரியை ஜோதிலட்​சுமியை பணி​யிட மாற்​றம் செய்​தும் முதன்​மைக்கல்வி அலு​வலர் உத்​தர​விட்​டார். இதற்​கிடை​யில், மாணவரின் தந்தை வளவனூர் காவல்​நிலை​யத்​தில் கொடுத்த புகாரின்​பேரில், உடற்​கல்வி ஆசிரியர் மற்​றும் தலைமை ஆசிரியை மீது போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்​து, வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்