மேட்டூர் அணை நீர்மட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 100 அடியை எட்டியது.
தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த 2013-ம் ஆண்டு அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை நீர்வரத்து இருந்தது. இதனால், அந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதோடு, அதே ஆண்டு செப்டம்பரில் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேலும், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் அணை நீர்மட்டம் 98 அடி நிரம்பியது.
தற்போது, காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி யில் நீர் தொடர்ந்து திறக்கப்பட் டுள்ளதால், ஜூலை தொடக்கத்தில் இருந்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60,120 கனஅடியாகவும், நீர்மட்டம் 87.92 அடியாகவும் இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,07,064 கனஅடியாக உயர்ந்தது, இதனால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு 100 அடியை எட்டியது. நீர் திறப்பு விநாடிக்கு 1,000 கனஅடியாக உள்ளது. அணை நீர்வரத்து மற்றும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அணையின் 16 கண் மதகு பகுதியை தண்ணீர் தொட்டது.
இதையடுத்து, காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் அணையின் 16 கண் மதகு பகுதியில் பூஜை செய்து அணை நீரில் மலர் தூவி வழிபட்டனர்.
செல்ஃபி எடுக்கத் தடை
‘மேட்டூர் மற்றும் எடப்பாடி வட்டத்தில் உள்ள காவிரி நீர் படுகைகள் மற்றும் நீர் வழித் தடங்களான மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் அணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம் பட்டி மற்றும் நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப் பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது சுயபடங்களோ (செல்ஃபி) எடுப்பதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்’ என்று சேலம் ஆட்சியர் ரோஹிணி அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago