காலதாமதமாக இயக்கப்படும் ரயில்களால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். ரயில்களை கால அட்டவணைப்படி இயக்க தண்டவாளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான விரைவு ரயில்களும், புறநகர் பகுதி களுக்கு 650-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், ரயில்கள் கால அட்டவணைப்படி ஓடுவதில்லை. பல்வேறு காரணங்களால் பெரும்பாலான விரைவு, மின்சார ரயில்கள் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனர். கடந்த நிதி ஆண்டில் 30 சதவீத ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே வாரியமே அறிவித்துள்ளது.
ரயில்களை இயக்குவதற்கு அடிப்படை தேவையே தண்ட வாளங்கள்தான். ஆனால் அவை புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படாமல் இருப்பதே ரயில்களின் தாமதத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ரயில்வேயில் நவீன விரைவு ரயில்கள், பெட்டிகள், சிக்னல் செயல்பாடுகள் என தொடர்ந்து புதுமையை கொண்டு வரும் ரயில்வேத் துறை, ரயில் பாதைகளை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்தவில்லை என ரயில் ஓட்டுநர்கள் சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது:
ரயில்கள் ஒரு தண்டவாளத் தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாறிச் செல்லும்போது, 15 கி.மீ வேகத்தில் அவற்றை இயக்க வேண்டிய சூழல் உள்ளது. இப்படி, ரயில்களை இயக்கும்போது, ஒரு நடைமேடையை கடந்து செல்லவே 8 நிமிடங்கள் ஆகிவிடுகின்றன. குறிப்பாக திருவொற்றியூர், எண்ணூர், மீஞ்சூர், பொன்னேரி, கவரப்பேட்டை என கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில்களின் தாமதத்துக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. தண்டவாளத்தை மாற்றிச் செல்லும்போது ரயில்கள் 30 கி.மீ வேகத்தில் இயக்கும் வகையில் தண்டவாளத்தை மேம்படுத்தி னால் நடைமேடையை 4 நிமிடங்களில் கடந்து செல்ல முடியும். தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே தனிப்பாதை இருப்பதால் ரயில் தாமதத்துக்கு தண்டவாளம் பெரிய பிரச்சினையாக இல்லை.
இதேபோல், தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் வண்டலூர், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய இடங்களிலும் தண்டவாளத்தை மாற்றி செல்ல 15 கி.மீ வேகத்திலேயே செல்ல வேண்டியுள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மட்டுமே தண்டவாளங்களை மாற்றி செல்லும்போது 30 கி.மீ வேகத்தில் கடக்கும் வகையில் தற்போது புதிய வடிவமைப்புடன் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை மற்ற இடங்களில் விரிவுபடுத்தினால், மின் சார ரயில்கள் மட்டுமல்ல, விரைவு ரயில்களும் காலதாமதமின்றி இயக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறும்போது, “ரயில்கள் காலதாமதத்தால், பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ரயில்வேத் துறைக்கும் பெரிய இழப்பு தான். ரயில்கள் தண்டவாளம் மாறும்போது, 30 கி.மீ வேகத்தில் கடக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தடத்திலும் சுமார் ரூ.70 கோடி வரையில் செலவிட வேண்டியுள்ளது. தற்போது, அரக்கோணம் தடத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மற்ற இடங்களிலும் இந்த பணி கள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago