சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையெழுத்திட்டு தெரிவித்துள்ள வாழ்த்து கவனம் ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழில் கையெழுத்திட்டு தமிழிலேயே வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்த்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்த நாளில் தங்களை வாழ்த்துகிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.
» பெங்களூருவில் நடந்த சம்பவம் போல் மனைவி சித்ரவதை தாங்காமல் மும்பை ஐ.டி. மேலாளர் தற்கொலை
» சிறு வியாபாரிகளுக்கான தொழில் உரிம கட்டணம் குறைப்பு: தமிழக அரசுக்கு விக்கிரமராஜா நன்றி
பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்” என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago