பழுதடைந்த பேருந்துகளால் பாதிக்கப்படும் பயணிகள்: போக்குவரத்து நிர்வாகம் கவனிக்குமா?

By இரா.ஜெயப்பிரகாஷ்

காஞ்சிபுரம் பகுதியில் இருந்து இயக்கப்படும் பழுதடைந்த பல அரசுப் பேருந்துகளால் அடிக்கடி போகும் இடத்துக்கு உரிய நேரத்தில் போக முடியாமலும், உயிர் பயத்திலும் பொதுமக்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

காஞ்சிபுரம் நகரத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே ஒரு பணிமனையும், ஓரிக்கையில் 2 பணிமனைகளும் உள்ளன. இந்த 3 பணிமனைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்துகள் தாம்பரம், கோயம்பேடு, பூந்தமல்லி, திண்டி வனம், விழுப்புரம், திருச்சி, திரு வண்ணாமலை ஆகிய பகுதி களுக்கு அதிக அளவில் இயக்கப் படுகின்றன. இவை மட்டும் அல்லா மல் அருகாமையில் உள்ள கிராமப் பகுதிகளுக்கும் உள்ளூர் பேருந்துகள் பல இயக்கப்படு கின்றன.

இப்பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப் படுவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இவை ஆங் காங்கே பழுதாகி நிற்கின்றன. இதனால் பயணிகளின் பயணம் தாமதப்படுவதுடன் சில சமயங் களில் பயணிகளின் உயிருக்கே அச்சுறுத்தலாகவும் உள்ளன.

ஓரிக்கை பணிமனையைச் சேர்ந்த ஒரு பேருந்து காஞ்சிபுரத் தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்றது. இந்தப் பேருந்தில் சக்கரம், மோட்டார் ஆகியவற் றுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பகுதி பேருந்து செல் லும்போது உடைந்தது. பேருந்து செல்லும் வேகத்தில் உடைந்த இரும்பு பேருந்தின் அடிப்பாகத்தை துளைத்துக் கொண்டு பேருந்தின் உள்பகுதியில் வந்து விழுந்தது. இதனால் பேருந்து தாறுமாறாக ஓடி நின்றது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தச் சம்பவத்தால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதுபோல் அடிக்கடி பழுது ஏற்படுவது, டயர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் வெடிப்பது போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்களிடம் கேட்டபோது, “பேருந்தில் குறைபாடு உள்ளது என்று நாங்கள் கூறினாலும் நிர் வாகத்தில் உள்ளவர்கள் கண்டு கொள்வதில்லை. பேருந்துகளைக் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு அதனை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு ஓரம் கட்டப் படும் பேருந்துகளின் உதிரிப் பாகங்களை எடுத்து ஓடும் பேருந்துகளுக்கு பொருத்தும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுதான் பிரச்சினைகளுக்கு முதல் காரணம்” என்றனர்.

பேருந்து போக்குவரத்தில் போக்குவரத்துத் துறையின் வரு மானம் மட்டும் இல்லாமல், பொது மக்களின் உயிர் பிரச்சினையும் அடங்கியுள்ளது. எனவே பேருந்து களை முறையாகப் பராமரிப்பது, உதிரிப் பாகங்களை வாங்கிப் பொருத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்