தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித் துறையை சீரழிக்கிறது திமுக அரசு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல், திமுக அரசு கல்வித் துறையை சீரழிக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 44 மாத திமுக ஆட்சியில் பெரிய அளவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு கடந்த ஆண்டு பிப். 4-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்று, 2,800 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து, பட்டதாரி ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் 9, 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை கையில் ஏந்தியவாறு எழும்பூர் ராஜராத்தினம் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நவ.30-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகள் அளிக்கப்படும் என்று அரசுத் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்கள், தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டனர். தற்போது 3 மாதங்களாக வேலையில்லாமல் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்வு முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், பணி நியமன ஆணைகள் வழங்காமல் திமுக அரசு கல்வித் துறையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டு, இரண்டே முக்கால் ஆண்டுகளில் 51,757 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

எனவே, ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நியமன தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,800 ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்