தமிழகம்

உலக அளவில் ட்ரெண்ட் ஆன ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்குகள்: எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட திமுக - பாஜக

செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்குகளை உலக அளவில் திமுக - பாஜகவினர் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் ‘கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்தினார்கள். மீண்டும் இதேபோல தமிழக மக்களிடம் முயற்சி செய்தால் ‘கெட் அவுட் மோடி’ என்று கூறி துரத்துவார்கள்’’ என்று பேசினார்.

அதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஸ்டேக்கும் உலகளவில் ட்ரெண்ட்டாக்கினர். இதனால் கொதித்துபோன பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்​திரங்​களைப் பயன்​படுத்தி, எக்ஸ் தளத்​தில் ‘கெட்​-அவுட் மோடி’ என்று ட்ரெண்டிங் செய்​துள்ளனர். ஸ்டா​லின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்​டும் என ‘கெட்​ அவுட் ஸ்டா​லின்’ என்று எக்ஸ் தளத்​தில் பதிவிடப்​போகிறோம். யார் அதிகமாக ட்ரெண்​டிங் செய்​தனர் என்ப​தைப் பார்த்து​விடு​வோம்” என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என அண்ணாமலை பதிவு செய்தார். இவரை தொடர்ந்து, பாஜகவினர் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

இதனால், சமூக வலைதளங்களில் திமுக மற்றும் திமுகவினர் கடுமையாக மோதிக்கொண்டனர். தற்போது, இந்த ஹேஷ்டேக்குகள் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

SCROLL FOR NEXT