போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்: தலைமைச் செயலர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ​போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச் செயலர் முரு​கானந்தம் அறிவித்​துள்ளார்.

கல்வி நிறு​வனங்​களில் குழந்தை​களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்​கொள்வது தொடர்பாக சென்னை தலைமைச் செயல​கத்​தில் நேற்று உயர்​நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்​றது. தலைமைச் செயலர் நா.முரு​கானந்தம் தலைமை வகித்​தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி​கள், உயர் கல்வி நிறு​வனங்​களுக்கு பல்வேறு அறிவுறுத்​தல்கள் வழங்​கப்​பட்டன. அதன் விவரம்: கல்வி நிறு​வனங்​களில் குழந்
தை​களுக்கு எதிரான பாலியல் குற்​றங்​களில் ஈடுபடு​வோர் மீது துறைரீ​தியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கப்​படும். போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​கள், பணியாளர்​களின் பள்ளி, உயர்​கல்வி சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும். பணியாளர்கள் அனைவரும் ‘குழந்தை பாது​காப்பு உறுதி​மொழி’ ஆவணத்​தில் கையெழுத்​திடுவது கட்டாய​மாகும்.

அனைத்து பள்ளி மாணவ, மாணவி​களுக்கு ‘சுய பாது​காப்பு கல்வி’ அளிக்​கப்பட வேண்​டும். ஆசிரியர் பட்டய மற்றும் பட்டப்​படிப்பு பாடத்​திட்​டங்​களில் குழந்தை​களுக்கு நடக்​கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடம் சேர்க்​கப்​படும். போக்சோ வழக்​குகள் தொடர்பான அனைத்து விவரங்களை தொகுக்​க​வும், கண்காணிக்​க​வும் தொடர்பு அலுவலர் நியமிக்​கப்பட வேண்​டும். மாணவிகள் பயணம் செய்​யும் பள்ளி வாகனங்​களில் பெண் உதவி​யாளர்கள் பணியமர்த்​தப்பட வேண்​டும்.

இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளி​களில் உடற்​கல்வி பணியிடங்​களில் ஆசிரியைகளை நியமனம் செய்​ய​வேண்​டும். விளை​யாட்டு போட்​டிகள், கலை நிகழ்ச்​சிகள், கல்வி சுற்றுலா போன்ற​வற்றுக்கு மாணவிகளை ஆசிரியைகளே அழைத்​துச் செல்ல வேண்​டும். கல்வி நிறு​வனங்​களுக்கு வெளியே முகாம்​களில் தங்கும்பட்சத்​தில் மாணவி​களுடன் ஆசிரியைகள் மட்டுமே தங்குவதை உறுதி செய்​ய​வேண்​டும்.

மாணவியர் விடு​திக்​குள் வெளிநபர்கள் அனும​திக்​கப்பட கூடாது.விடுதி பராமரிப்பு பணி, பெண் காப்​பாளர்கள் மேற்​பார்​வை​யில் மட்டுமே மேற்​கொள்​ளப்​பட​வேண்​டும். அனைத்து கல்வி நிறு​வனங்​களி​லும் ‘1098’ மற்றும் ‘14417’ ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்பு​ணர்வு பதாகைகள் அமைக்​கப்பட வேண்​டும். அனைத்து பள்ளி​களி​லும் ‘மாணவர் மனசு புகார் பெட்டி’ மற்றும் முக்​கியமான இடங்​களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி​செய்ய வேண்​டும்.

பாலியல் குற்​றங்கள் பற்றி தெரிய​வந்​தால், சம்பந்​தப்​பட்டபள்ளி​யின் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து, மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு அலுவலருக்​கும் தகவல் தெரிவிக்க வேண்​டும். புகார் அளிக்​கும் மாணவி​களின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது.

இந்த அனைத்து பரிந்​துரைகளை​யும் அரசு மற்றும் தனி​யார் பள்​ளி​கள், உயர் கல்வி நிறு​வனங்​கள் கண்​டிப்பாக பின்​பற்றுவதை சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்​கள் உறு​தி​செய்ய வேண்​டும். இவ்​வாறு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்