பாலியல் புகாரில் காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட்: பொய் புகார் அளித்ததாக பெண் போலீஸ் மீது மனைவி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பாலியல் குற்​றச்​சாட்​டால் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்ட இணை ஆணையர் மீது சம்பந்​தப்​பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்புகார் அளித்​துள்ளதாக அவரது மனைவி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவல​கத்​தில் புகாரும் அளித்​துள்ளார்.

சென்னை போக்கு​வரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்கு​மார், தனக்கு பாலியல் தொந்​தரவு அளிப்​பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபி​யிடம் புகார் அளித்​திருந்​தார். இதன்​பேரில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யின் அடிப்​படை​யில் மகேஷ்கு​மாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்கு​மார் உத்தர​விட்​டார். மேலும் அவருக்கு உடந்​தையாக இருந்​ததாக மாதவரம் போக்கு​வரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலை காத்​திருப்​போர் பட்டியலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றினார்.

இந்நிலை​யில், தன் கணவரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்த பெண் போலீஸ் மீது, மகேஷ்கு​மாரின் மனைவி​யும் முன்​னாள் எஸ்ஐ​யுமான அனுராதா குற்றம் சாட்டினார். செய்தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: எனது கணவர் மீது அந்த பெண் போலீஸ் பாலியல் பலாத்​காரம், துன்​புறுத்தல் என்றெல்​லாம் புகார் சொல்லி இருக்​கிறார். அந்த மாதிரி எதுவும் இல்லை. அவர்கள் 2 பேருக்​கும் ஏற்கெனவே ஒரு உறவு இருந்தது. இந்த விவகாரத்​தில் அந்த பெண்​ணை​யும் என் கணவரை​யும் கண்டித்து இருக்கிறேன். ஆனால் அந்த பெண் போலீஸ் பழிவாங்​கும் செயலாக எங்கள் குடும்பத்தை பிரிக்க பார்க்​கிறார்.

எனது கணவரிடம் அந்த பெண் போலீஸ் அவ்வப்​போது பணம் கேட்​பார். இவரும் கொடுத்து வந்தார். அந்த பெண் மறைமலைநகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். திடீரென்று எனது கணவரிடம் வீட்​டின் கட்டுமான பணிக்கு ரூ.25 லட்சம் கேட்​டார். அவ்வளவு பெரிய தொகை இல்லை என எனது கணவர் சொன்ன​தால், அந்த பெண் எனது கணவரை மிரட்ட தொடங்​கினார். தற்போது பொய் புகார் கொடுத்​துள்ளார். கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக அவர்கள் 2 பேரும் தெரிந்​தே​தான் பழகினார்​கள். அப்புறம் எப்படி பாலியல் பலாத்​காரம், துன்​புறுத்தல் என்று சொல்ல முடி​யும். இந்த விவகாரத்​தில் சரியான முறை​யில் விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். அவசரப்​பட்டு எனது கணவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடாது. எனவே தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்​டாம். இவ்வாறு கூறினார்.

மேலும், அந்த பெண் போலீஸும் மகேஷ்கு​மாரும் ஓட்டலுக்கு சென்​றிருந்த சிசிடிவி காட்​சிகளை​யும் அனுராதா வெளி​யிட்​டார். பின்னர் டிஜிபி அலுவல​கத்​தில் நேற்று புகார் அளித்​தார். அ​தில் தனது கணவருடன் தகாத உற​வில் ஈடு​பட்டு ரூ.25 லட்​சம் கேட்டு மிரட்டி பொய்யான பாலியல் துன்​புறுத்​தல் பு​கார் அளித்​துள்ள பெண் ​போலீஸ் மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்​று கூறி​யுள்​ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்