அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்​நுட்ப பணிகள் தேர்வு (நேர்​முகத் தேர்வு மற்றும் நேர்​முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன.
வழக்​கமாக வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்​வு​கள், எத்தனை காலி​யிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்​களும் விரிவாக குறிப்​பிடப்​பட்​டிருக்​கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்ட​வணை​யில் அதுபோன்று காலி​யிடங்கள் பற்றிய விவரம் இடம்​பெற​வில்லை.

மேலும், முன்பு தனித்தனி தேர்வாக நடத்​தப்​பட்டு​வந்த பல தேர்​வுகள் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப தேர்​வுகள் (நேர்​காணல் உள்ளவை), ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பத்​தேர்​வுகள் (நேர்​காணல் இல்லாதவை) என இரு பெரிய தேர்​வு​களாக சுருக்​கப்​பட்​டுள்ளன. தேர்வு அட்ட​வணை​யில் அந்த ஒருங்​கிணைந்த தேர்​வு​களில் என்னென்ன பதவி​களுக்கான தேர்​வுகள் இருக்​கும் என்பதும் அவற்றில் குறிப்​பிடப்​பட​வில்லை. இதனால், எத்தனை காலி​யிடங்கள் அறிவிக்​கப்​படும். எந்தெந்த பதவி​களுக்கு தேர்​வுகள் நடத்​தப்​படும் என்பது தேர்​வர்​களுக்கு தெரிய​வில்லை.

இதுகுறித்து டிஎன்​பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிர​பாகரிடம் கேட்​ட​போது, “தற்​போதைய நிலை​யில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2024-2025) ஒதுக்​கப்​பட்ட அனைத்து காலி​யிடங்​களுக்​குமான போட்​டித்​தேர்​வு​களும் நடத்தி முடிக்​கப்​பட்டு​விட்டன. எனவே, அடுத்த நிதி ஆண்டுக்கான காலி​யிடங்​களின் விவரம் மார்ச் மாதத்​துக்கு பிறகே அதாவது ஏப்ரலில்​தான் தெரிய​வரும். தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் வெளி​யிடும்​போது அதில் காலி​யிடங்கள் எண்ணிக்கை​யும் எந்தெந்த பதவிகள் என்பதும் இடம்​பெறும்.

தேர்​வாணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​வு​களின் முடிவுகளை குறித்த காலத்​தில் வெளி​யிடு​வதற்கு முன்னுரிமை அளிக்​கிறோம். கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்​தப்​பட்ட ஒருங்கிணைந்த தொழில்​நுட்​பணி​களுக்கான தேர்​வு​களின் (நேர்​காணல் இல்லாதது) ​முடிவு​கள் பிப்​ரவரி ​மாதம் வெளி​யிடப்​படும் என அறி​வித்​திருந்​தோம். அதன்​படி, அத்​தேர்​வு​களின் ​முடிவு​கள் அடுத்த வாரம் வெளி​யிடப்​படும்​” என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்