மதுரை: தமிழகம் முழுவதும் ஏப்.28-க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும். இதை தலைமை செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடி, மாடக்குளம் பகுதியில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகள் சித்தன், கதிரவன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் மனுக்களை தள்ளுபடி செய்து, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் நிரந்தர கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும். தனியார் நிலங்களில் கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, தமிழகம் முழுவதும் ஏப்ரல் 28-க்கு முன்பு அனைத்து பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதை தமிழக தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago