அண்ணா 56-வது நினைவு நாள்: பிப்.3-ல் திமுக அமைதிப் பேரணி

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் பிப்.3-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

வாலாஜா சாலையில் இருந்து...: முன்னதாக அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

இந்நிலையில், திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்பர் என சென்னை மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 secs ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்