ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் தாயகம் திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களங்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ. பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஜனவரி 12-ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்டனர்.
8 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜமீல், 8 மீனவர்களின் 2 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு தலா இலங்கை ரூ. 60 லட்சம் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனையும், மற்ற 6 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் 6 மீனவர்கள் மட்டும் அபராதத் தொகையை கட்டி விடுதலையடைந்ததால், புதன்கிழமை இரவு கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீனவர்கள் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago