சென்னை: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப். 1-ம் தேதி தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பங்கேற்க உள்ள திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம். நாளை (29-ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்தச் சட்டம், யுஜிசி வரைவு கொள்கை, பொது சிவில் சட்டம் போன்றவை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்தை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago