தருமபுரி: “மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை அகற்றுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிரணியில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை” என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவின், மணி மண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா ஆலயத்தில் வழிபடுவதற்காக, பாஜகவினர் கடந்த 2022-ம் ஆண்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் பதிவு செய்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணைக்காக, நீதிமன்றத்துக்கு வந்திருந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்திய நாள், ஜனநாயக வரலாற்றில் புனிதமான நாளாக கருதப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாலின வேறுபாடு அற்ற நிலையை உருவாக்குவது தான் பொது சிவில் சட்டம். ஒவ்வொரு மதம், சாதிக்கு என பாகுபாடின்றி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் தான் இந்த பொது சிவில் சட்டம். உத்தராகண்ட் மாநிலத்தைப் போலவே, தமிழகத்திலும் முதலமைச்சர் பொது சிவில் சட்டத்தை வரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரிலேயே சட்டப் பேரவையில் அறிவிக்க வேண்டும்.
வாக்கு வங்கிக்காக இவர் போராடுவதெல்லாம் வெளி வேஷம், நாடகம். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தி உள்ளனர். இவர்களுக்கு தமிழக காவல்நிலை துறை மீது நம்பிக்கை இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எந்த கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் நாட்டு மக்களின் நன்மைக்காக சட்டப்பேரவையில் நியாயமான முறையில் போராடி வந்துள்ளனர். இடையில் அவர்களின் ஜனநாயக முறையிலான பேச்சு தடைபட்டிருந்தது.
» நவாஸ்கனி எம்.பி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
» சென்னையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
இந்நிலையில், தற்போது வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியிருப்பதை பாஜக வரவேற்கிறது. அதேநேரத்தில், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிரணியில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை.
சீமான் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதால் பெரியாரை இகழ்ந்து பேசுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது. 30 ஆண்டு காலம் திமுகவில் பயணித்த நான் பெரியாரைப் பற்றி மேடைகளில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால், அப்போதும் கூட இந்த மண்ணை பெரியார் பூமி என்று கூறவில்லை. மண்ணுக்கு கிடைக்கும் வரலாறு என்பது இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களின் வாழ்க்கை தான். நம் மண்ணுக்கான உண்மையான வரலாறு ஆன்மிகம் தான். தேசியமும், ஆன்மிகமும் தான் இந்த மண்ணின் அடிப்படை.
தமிழகம் இன்று வேண்டுமானால் நீரு பூத்த நெருப்பாக இருந்தாலும் என்றைக்கும் தேசியத்தையும், தெய்வீகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்து விட முடியாது. தேசியம் மற்றும் தெய்வீகம் என்ற நெருப்புத் துண்டின் மீது போர்த்தப்பட்டுள்ள திராவிடப் போர்வை விரைவில் எரிந்து சாம்பலாகும். மத்திய அரசு பணியாளர்களுக்கு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோல, தமிழக அரசும் மாநில அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்'' என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago