இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பட்டப்பெயர் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
புழல் சிறையில் தன்னை தனிமைச்சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் கூறி பல்வேறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, புழல் சிறையில் செயல்பட்டு வந்த கேண்டீன் மூடப்பட்டதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்த காரணத்தால் சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அணைத்துவிட்டு கடுமையாக தாக்கப்படுவதாக தெரிவித்தார். சிறை நிர்வாகம் தரப்பில், போலீஸ் பக்ருதீன் தனிமைச்சிறையில் அடைக்கப்படவில்லை எனவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தவறு இழைப்பவர்களாக மாறிவிடக்கூடாது என்றும், குற்றவாளியாக இருந்தாலும் கூட அவர்களிடமும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சிறைக் கைதிகளிடம் காட்டும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்.
» 2026 தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக: அண்ணாமலை
அனைத்து இடங்களிலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. முன்பெல்லாம் லஞ்சம் வாங்குபவர்களை தவறாக பார்க்கும் காலம் மாறி, தற்போது லஞ்சம் வாங்காதவர்களை தவறாக பார்க்கும் காலம் வந்துவிட்டது. இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் இந்த விசாரணைக்கு வந்தபோது புழல் சிறையில் இருந்த போலீஸ் பக்ருதீன் காணொலியி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனிமை சிறையில் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் நடப்பதைக் கூறினால் கொலை செய்து விடுவதாக அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். அதையடுத்து வரும் ஜன.27 அன்று அவரை ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பட்டப்பெயர்கள்: இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், போலீஸ் பக்ருதீன் என்ற பெயர் எப்படி வந்தது என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள், தவறு செய்தவர்களை திருத்த வேண்டிய சிறைச்சாலைகளும், போலீஸாரும் இதுபோல அடைமொழி வைத்து அவர்களை சமூகத்தில் பெரிய குற்றவாளிளாக மாற்றி விடுகின்றனர். பாம் சரவணன், பாம்பு நாகராஜ், குரங்கு குமார் என பட்டப்பெயர் வைத்து அழைப்பது ஏன். அதுவே அவர்களது அடையாளமாகி ஆவணங்களிலும் இடம்பெறுகிறது. அதற்குப்பதிலாக அவர்களின் தந்தை பெயர் வைத்து அழைக்கலாம். இதுபோன்ற பட்டப்பெயர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே பட்டப்பெயர் வைப்பதை போலீஸார் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago