டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை காலை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதனால் போதிய அளவு விதை மற்றும் உரங்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு முதல்வர் கே.பழனிசாமி அறிவுறுத்தி யுள்ளார். அதன்படி, டெல்டா மாவட்டங்களில் நெல் விதைகளும், உரங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரி கூறியதாவது:
‘‘டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், கரூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக 7 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நீண்டகால நெல் ரகங்களான CR 1009, CR 1009 SUB ஆகியவை அதிகளவில் உள்ளன. மேலும், 3 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகளை வரவழைக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதுபோல உரங்களைப் பொறுத்தவரை, டெல்டா மாவட் டங்களில் சம்பா சாகுபடிக்காக 30 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா, 16 ஆயிரத்து 500 டிஏபி, 12 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் பொட்டாஷ், 33 ஆயிரத்து 200 காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பு உள்ளன. டெல்டா பாசனத்துக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், அனைத்து விவசாயிகளும் ஒரேநேரத்தில் சாகுபடி செய்வார்கள். எனவே, வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் உரங்களை வழங்கும்படி மத்திய அரசைக் கேட்டுள்ளோம்.
விதை மற்றும் உர விற்பனை வெளிப்படையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் செல்போனில் ‘உழவன்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, அதில் மாவட்டம், வட்டாரம், கிராமத்தைப் பதிவிட்டால் அங் குள்ள விதை மற்றும் உரத்தின் இருப்பு விவரத்தை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறியலாம். யாரும் விதை இல்லை அல்லது உரம் இல்லை என்று சொல்லி செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியாது.
அதையும் மீறி விதை மற்றும் உரம் கிடைப்பதில் சிரமம் இருந்
தால் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். அதிலும் நிவாரணம் கிடைக்காவிட்டால் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.
தேவைப்பட்டால் சென்னையில் உள்ள வேளாண் இயக்குநர் தலைமை அலுவலகத்தை 044 – 28583323 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரி விக்கலாம்.
இந்த பருவத்தில் 9 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடை பெறும். இதன்மூலம் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும், அவற்றில் இருந்து 30 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago