கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் 18 தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவருமான பாலபாரதி. பிரச்சாரப் பயணத்துக்கு நடுவில் ‘தி இந்து’வுக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டி.
இந்த நாடாளுமன்றத் தேர்தலை அம்பானிகள், பிர்லாக்கள் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளே முதலீடு செய்து நடத்துவதாக சொல்லப்படுகிறதே?
உண்மைதான். இந்தத் தேர்த லில் இந்த அரசுதான் வர வேண் டும் என்று தீர்மானித்து கார்ப்பரேட் முதலாளிகள் களத்தில் இறங் கியுள்ளனர். தனியார்மயம் பெருகி வரும் இந்தச் சூழலில் கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக வருவது ஆபத்தான விஷயம்.
ஆனால், மக்கள் மிகத் தெளிவானவர்கள். எனவே, இந்தத் தேர்தலில் கார்ப்ப ரேட் முதலாளிகளின் கனவு தகர்ந்து போகும். பாஜக-வுக்கும் காங்கிர ஸுக்கும் அறுதிப் பெரும்பான்மை நிச்சயம் கிடைக்காது.
தமிழகத்தில் இடதுசாரிகள் களத் தில் இருப்பதாகவே தெரியவில்லையே?
இதுவும் கற்பனையே. எங்களோடு களத்துக்கு வந்து பாருங் கள் உண்மை தெரியும். இடதுசாரி கள்தான் சரியான, நேர்மையான இயக்கங்கள் என்ற வெளிச்சக் கீற்று மக்களிடம் தெரிய ஆரம்பித்திருக் கிறது. இதுதான் உண்மை.
உங்களுக்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருக்கிறதென்றால் நாற்பது தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கலாமே?
கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழலை உண்டாக்கினார் ஜெயலலிதா. அதனால், எங்களுக்கு போதிய அவகாசம் இல்லாமல் போய்விட்டது. எனவே எங்களுக்கு வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம்.
அதிமுக உங்களுக்கு தந்த படிப் பினையை தொடர்ந்து இனிமேல் அந்தக் கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?
திராவிடக் கட்சிகள், மத்தியில் தங்களுக்கான பதவிகளை உறுதி செய்வதில்தான் குறியாய் இருக் கின்றன. மாற்று சக்திகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் இடதுசாரிகளை ஒதுக்கிவிட்டு கூட்டணி அமைத் திருப்பார்களா? ‘இரண்டு கட்சிகளோடும் மாறி மாறி கூட்டணி வைத்தீர்களே’ என்பதுதான் இப்போது எங்களுக்கு எதிரான விமர்சனமாக இருக்கிறது. தமிழகத் தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இடதுசாரிகள் உருவெடுக்கும் சூழல் உருவாகிக் கொண்டி ருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு பாஜக-வை ஆதரிக்கும் திட்டத்துடன்தான் இடதுசாரிகளை ஜெயலலிதா கூட்டணியிலிருந்து வெளியேற் றியதாக நினைக்கிறீர்களா?
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா காங்கிரஸை விமர்சிக்கிறார். ஆனால், பாஜக-வை பற்றி எதுவுமே பேசுவதில்லை. சட்டமன்றத்தில் விஜயகாந்தை உட்காரவிடாமல் தொல்லை கொடுத்தார்கள். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத் தில் அதிமுக-வை கண்டபடி விமர்சிக்கிறார்.
ஆனால், அதிமுக தரப் பில் அவரைப் பற்றி எதுவுமே பேச வதில்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ‘மத்தியில் நல்லரசு அமைப்போம்’ என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால், ‘16 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இடது முன்னணியில் சேர்ந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லவில்லை. ஜெயலலிதா யாருடைய ஆட்சியில் அங்கம் வகித்து மாநில உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
நீங்கள் ஒரு பெண் பிரதிநிதி என்ற முறையில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா பிரதமராகும் சூழல் அமைந்தால் அவரை ஆதரிப்பீர்களா?
தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பாஜக ஆதரிக்கும் எந்த அரசுக்கும் நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago