மீஞ்சூர் அருகே காருக்கு தாங்களே தீவைத்துவிட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
மீஞ்சூர் அருகே உள்ள புங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் காளிகுமார் (34). இவர், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநிலச் செயலாளராக உள்ளார். அவரது நண்பர் ஞானசேகர் (30) மீஞ்சூர் நகரச் செயலாளராக உள்ளார். காளிகுமாரின் சகோதரர் மகன் ரஞ்சித்.
இவர்கள் மூவரும் மீஞ்சூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வெள்ளிக்கிழமை காரில், மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்டச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியதாக கூறப்பட்டது.
இதையடுத்து, தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முழுவதும் எரிந்து நாசமானது.
திருவள்ளூர் எஸ்பி சிபிசக்ரவர்த்தி, பொன்னேரி டிஎஸ்பி ராஜா, சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காளிகுமாரை போலீஸார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாகக் கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த போலீஸார், காளிகுமார் உடன் சென்ற ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். அதில், காரை தாங்களே கொளுத்திவிட்டு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸார், காரைக் கொளுத்திவிட்டு, நாடகமாடியது ஏன் என விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago