ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கதறி அழுத பெற்றோர், உறவினர்கள்

By இ.ராமகிருஷ்ணன்

ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக் காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு அவர்களது உடல்களைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் உடனடியாக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தனர். விபத்துக்கு காரணமான தடுப்புச் சுவரில் தலையை முட்டிக்கொண்டு கண்ணீர் விட்டுக் கதறினர்.

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, பெற்றோ ரும் உறவினர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு உடல்களைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது, அனைவரையும் கண் கலங்கச் செய்தது.

விபத்தில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த பரத் (16) பொழிச்சலூரைச் சேர்ந்தவர். தாம்பரத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். ஆரம்பத்தில் பேருந்து மூலம்தான் பள்ளிக்குச் சென்று வந்துள் ளார். சில வாரங்களுக்கு முன்பு குடும் பத்தில் சண்டை ஏற்பட்டதால், கோபித்துக் கொண்டு, தண்டையார்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார். அங் கிருந்து தினமும் ரயில் மூலம் பள்ளிக்கு சென்றுவந்துள்ளார். இதனால்தான், விபத்தில் சிக்கிவிட்டார் என்று அவரது உறவினர்கள் கதறியபடி கூறினர்.

பரத்தின் சடலத்தைப் பார்த்து அவரது தாய் கண்ணீர் விட்டு கதறி துடித்தார். ‘‘நன்கு படித்து, ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என ஆசைப்பட்டாயே. அந்த கனவு கனவாகவே போய்விட்டதே. சீருடையில் பார்க்க நினைத்தோம். இப்படி வெள்ளை ஆடை போர்த்திக்கொண்டு கிடக்கிறாயே’’ என கதறிய அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

உயிரிழந்த மற்றொருவர் பெயர் சிவக்குமார் (19). சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த இவர் பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். இவரது தந்தை பழனி, பூ வியாபாரம் செய்பவர். மகனின் இறப்பு செய்தி கேட்டு ராயப் பேட்டை மருத்துவமனைக்கு குடும்பத் தினருடன் ஓடிவந்தார். ‘‘படித்து பெரிய அதிகாரியாகி, உன்னை ராஜா போல வாழ வைப்பேன் என்றாயே. உன்னை பெரிய ஆளாக்க வேண்டும் என்றுதானே இரவு பகலாக பூ வியாபாரம் செய்கிறேன். நான் கட்டும் பூமாலைகளை உன் உடலுக்கு போடும்படி ஆகிவிட்டதே’’ என்று கதறி அழுதார்.

விபத்தில் உயிரிழந்த மற்றொருவர் நவீன்குமார் (23). பொறியியல் பட்டதாரி யான இவர் தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். உயிரிழந்தவர்களில் மற்றொ ருவர் குறித்த விவரம் தெரியவில்லை. காயமடைந்த 6 பேரில் பல்லாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீவத்சன் என்பவரது முழங்காலுக்கு கீழே இரு கால்களும் துண்டாகிவிட்டன.

பரங்கிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த பெண் போலீஸார் நிறுத்தப்பட்டனர். உயிரிழந்தவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுவதைப் பார்த்து, பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீஸார் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டனர்.

4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்த வர்கள் என்ற விவரம் உடனடியாக தெரிய வில்லை. சிதறிக் கிடந்த உணவு பொட்ட லம், செல்போன், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சேகரித்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து, உயிரிழந்த 3 பேரின் அடையாளத்தை உறுதி செய்தனர்.

அதன் அடிப்படையில், அவர்களது பெற்றோருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தலை துண்டான 2 பேரின் உடல்களுடன் மீண்டும் தலையைப் பொருத்திப் பார்த்து அடையாளம் காணப்பட்டபோது, திரண்டிருந்த பொதுமக்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்