காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் அதிக அளவில் திரளும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி, வண்டலூர் பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு மையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம். இதை கருத்தில் கொண்டு, சென்னையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத் திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
மெரினாவில் பல லட்சம் பேர் திரள்வார்கள் என்பதால் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக, நீச்சல் தெரிந்த 200 பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவை சேர்ந்த 85 பேரும் பணியில் உள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்க மெரினாவில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் அதில் நின்றபடி சுழற்சி முறையில் கண்காணிப்பார்கள். பெசன்ட் நகர் கடற்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் தலா 4 ட்ரோன் கேமராக்கள் வீதம் மொத்தம் 8 ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கைகளில், அவர்களது பெயர், பெற்றோரின் செல்போன் எண், முகவரி அடங்கிய பிரத்யேக பட்டை கட்டப்பட உள்ளது.
» ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: களத்தில் அசத்தும் காளைகள்... அடக்கும் காளையர்!
பைக், கார் ரேஸை தடுக்கும் வகையில் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிக்க உள்ளனர். கடலோர காவல்படை: இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள், ஹெலிகாப்டர்களும் மெரினா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றன. கடலில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டாலோ, வேறு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ, உடனடியாக மீட்பு பணியில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படும் என்று இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்: காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று போக்குவரத்தில் போலீஸார் மாற்றம் செய்துள்ளனர். மெரினா காமராஜர் சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாகும் வரை வழக்கமான போக்குவரத்து முறை நீடிக்கும். மெரினா சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததும் மாற்றம் அமல்படுத்தப்படும். போர் நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும்.
கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திரும்பி பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை வழியாக செல்ல வேண்டும். வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்லலாம். பாரதி சாலை ஒருவழி பாதையாக செயல்படும். பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி செல்ல முடியாது.
காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மெரினாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்த 15 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago