​திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் குருமூர்த்தி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அம்பேத்கர் இந்துத்துவா கொள்​கைக்கு எதிரி என்று திரு​மாவளவன் தீவிரமாக பிரச்​சாரம் செய்​கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால் விட இருக்​கிறேன் என்று ‘துக்​ளக்’ இதழின் ஆசிரியர் குரு​மூர்த்தி தெரி​வித்​தார்.

துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்​பேட்​டை​யில் நேற்று முன்​தினம் நடைபெற்​றது. இதில் பங்கேற்​றவர்கள் பேசி​ய​தாவது: ‘துக்​ளக்’ ஆசிரியர் குரு​மூர்த்தி: காங்​கிரஸ் இல்லாத பாரதம் என்ற பாஜக​வின் கொள்​கையை ஏற்க​முடி​யாது. பாரத ஜனநாயகத்​துக்கு எதிர்க்​கட்சி என்பது அவசி​யம். ஆனால், அந்த கட்சி​யின் எதிர்​காலம் ராகுலை சார்ந்​துள்ளது. தலைமை பொறுப்​புக்கு ராகுல் தகுதி​யில்லை என்பதை முன்பே கூறி​விட்​டோம். தற்போது கூட்​ட​ணி​யில் உள்ள தோழமை கட்சிகளும் அதை உணர்ந்து கூறிவரு​கின்​றனர்.

தமிழகத்​தில் சமுதாய அளவில் பெரிய மாற்றம் வந்து கொண்​டிருக்​கிறது. அரசியல் அளவில் அந்த மாற்றம் வராமல் தடுப்​ப​தற்கான காரணம் வாக்கு வங்கி மற்றும் சாதி அரசி​யல். இந்த இரண்​டை​யும் உடைக்​கும்​போது தேசிய அரசியல் தமிழகத்​தில் உருவாகும். இங்கு ஆர்எஸ்​எஸ், பாஜக எந்த அளவுக்கு வளர்​கிறதோ, அந்த அளவுக்​கு​தான் மாற்றம் வரும். தற்போதைய முதல்வர் ஸ்டா​லின் பலவீனமான தலைவர். எனவே, திமுக​வுக்கு தனிப்​பெரும்​பான்மை கிடைக்க​வில்லை எனில், அவர் நிச்​சயமாக ஆட்சி​யில் பங்கு கொடுத்​து​தான் ஆக வேண்​டும்.

அடுத்த ஆண்டு தேர்தல் வருவ​தால் எல்லா கூட்​ட​ணி​யிலும் நிலை​யற்ற நிலைமை உள்ளது. திமுகவை தோற்​கடிக்க பாஜக​வும், அதிமுக​வும் சேர வேண்​டும் என்ப​தில் சந்தேகம் இல்லை. ஆனால், பழனிசாமி போன்ற ஒருதலைவரை வைத்து கொண்டு இந்த இணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்பது புரிய​வில்லை. திமுகவை தோற்​கடிக்க வேண்​டும் என்ற உறுதி பழனிசாமி​யிடம் இல்லை. அரசி​யலில் முதல்​முறையாக பெரி​யாரை நேரடியாக எதிர்த்​ததற்காக சீமானை பாராட்டு​கிறேன். இது தமிழகத்​துக்கு நல்லது. அம்பேத்கர் இந்துத்துவா கொள்​கைக்கு எதிரி என்று திரு​மாவளவன் தீவிரமாக பிரச்​சாரம் செய்​கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்​துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால்விட இருக்​கிறேன்.

மத்திய வர்த்​தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்: திட்​ட​மிட்ட கொள்​கைகள், வெளிப்​படையான நிர்​வாகம் காரணமாக இந்தியா கடந்த 10 ஆண்டு​களில் பெரும் வளர்ச்சி அடைந்​துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த 22 ஆண்டு​களுக்கு தொடரும். இதனால் 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாகும். அதற்கான அடித்​தளத்தை பிரதமர் மோடி வலுவாக அமைத்​துள்ளார். இந்திய அரசியல் சாசனத்​தில் 370-வது பிரிவை நீக்க தைரியமாக நடவடிக்கை எடுத்​தார் பிரதமர் மோடி. தனது அதிரடி நடவடிக்கைகளால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்​தார்.

மத்திய அரசு கொண்டு​வரும் ஒவ்வொரு திட்​ட​மும் மக்களின் நல்வாழ்​வை​யும், சமூக மேம்​பாட்​டை​யும் மனதில் கொண்டு செயல்​படுத்​தப்​படு​கிறது. வெளிப்​படையான நிர்​வாகம் பின்​பற்​றப்​படு​வ​தால் முறை​கேடு என்ற பேச்​சுக்கே இடமில்லை. தற்போது இந்தியா அடைந்​துள்ள எழுச்​சி​யால் உலக நாடுகள் இந்தியா​வின் தலைமைத்து​வத்தை அங்கீகரிக்க தொடங்​கி​ உள்ளன.

தமிழ்​நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்​பையா: நாட்​டில் படித்​தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு மாறாக அரசி​யலின் தரம் மிகவும் கீழ்​நோக்கி சென்று கொண்​டிருக்​கிறது. ஒருங்​கிணைந்த பள்ளி​கல்​வித் திட்​டத்​தில் மத்திய அரசு நிதி தர மறுப்​ப​தால்​தான் அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்கு ஊதியம் தர முடிய​வில்லை என்று தமிழக அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும், தமிழக அரசி​யலில் அறிவார்ந்த வாதங்களை முன்​வைக்க சிறந்த தலைவர்கள் இல்லை.

அதேபோல, நிலையான கொள்கை மற்றும் கருத்​துகளால் நாடு முன்னேற முடி​யாது. காலத்​துக்கு ஏற்ப தங்கள் கருத்து​களை​யும், கொள்​கைகளை​யும் மாற்றிக் கொள்வது தவறு கிடை​யாது. அது தர்மத்​துடன் பொருந்​துகிறதா என்ப​தை​தான் பார்க்க வேண்​டும். அரசியல் தலைவர்​கள், ஆட்சி​யாளர்​கள், அதிகாரிகள் என அனைவரும் வெளிப்​படையாக ஊழல் செய்​யும் ஒரு சூழல் தமிழகத்​தில் உருவாகி​யுள்​ளது. அண்ணா பல்லைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்​தில் உயர் நீதி​மன்​றம் ​தாமாக ​முன்​வந்து சிறப்பு குழுவை நியமித்​துள்ளது. இது தமிழக அரசுக்​கும், ​காவல் துறைக்​கும் கிடைத்த அவ​மானம். நேர்​மையற்ற அரசி​யல் தலை​வர்​களின் கை​யில் அதிகாரி​கள் இருக்​கும் ​போது, மக்​களுக்கு நீதி கிடைக்​கும் என்​பதை உறு​தியாக நம்ப ​முடி​யாது. இவ்​வாறு அவர்​கள்​ பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்