சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி திமுக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவர் புகுந்து உள்நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்புஎன்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டப்பேரவையில் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார், யார் அந்த சார் என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இதுபோன்ற சார்கள் காப்பாற்றப்படுவதால்தான், மேலும் பல சார்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மாநிலத்தின் தலைநகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பிரதான அரசு மருத்துவமனை வளாகத்துக்குள்ளாகவே பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
» போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
» சென்னையில் காற்றின் தர குறியீடு திருப்தி: 92 முதல் 177 வரை பதிவானதாக தகவல்
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் நடைபெற்றிருக்கும் இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago