தகுதியில்லாதவர் உயர் பதவிக்கு வந்தால்... - உதயநிதி குறித்து அண்ணாமலை சாடல்

By செய்திப்பிரிவு

கோவை: முதல்வர் ஸ்டா​லின் குறித்து கடும் வார்த்​தையைப் பயன்​படுத்த வேண்டிய கட்டா​யத்​துக்கு ஆளுநர் தள்ளப்​பட்​டார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்தி​யாளர்​களிடம் அவர் நேற்று இரவு கூறிய​தாவது: பாஜக தேசியத் தலைவர் நட்டா​வின் அனும​திக்​குப் பின்னரே, ஈரோடு இடைத்​தேர்​தலைப் புறக்​கணிக்​கும் முடிவை மேற்​கொண்​டுள்​ளோம். இதுவரை தேர்தலை புறக்​கணிக்காத பாஜக, தற்போது ஈரோடு இடைத்​தேர்தலை ஏன் புறக்​கணித்தது என்று மக்கள் பார்த்​துக் கொண்டு இருக்​கிறார்​கள். அதேநேரத்​தில், தேர்தலை நாங்கள் கண்காணிப்​போம்.

தேர்​தலில் போட்​டி​யிட்​டால்​தான் தைரியம் என்பது கிடை​யாது. அதிகார துஷ்பிரயோகத்​துக்கான முதலும் கடைசி​யுமான தேர்​தலாக ஈரோடு இடைத்​தேர்தல் இருக்​கும். 2026-ல் நடைபெற உள்ள சட்டப்​பேரவை பொதுத் தேர்தல் நேர்​மையாக நடக்க வேண்​டும் என்பது எங்கள் விருப்​பம். முதல்வர் குறித்து ஆளுநர் கடும் வார்த்​தையைப் பயன்​படுத்த வேண்டிய கட்டா​யத்​துக்கு தள்ளப்​பட்​டார். அவர் கூறியது சரியானது​தான். இனியாவது திமுக தனது போக்கை மாற்றிக்​கொள்ள வேண்​டும்.

பெரி​யாருக்​கும், நிகழ்​காலத்​துக்​கும் தொடர்பு இல்லை. பாஜக எப்போதோ பெரி​யாரைக் கடந்​து​விட்​டது. 2023 ஆகஸ்ட் 17-ம் தேதி வரை கனிமவளம் என்பது மாநில அரசு கையில் இருந்​தது. நாடாளு​மன்​றத்​தில் தீர்​மானம் நிறைவேற்றிய பின்னர், மத்திய அரசின் கட்டுப்​பாட்டுக்கு மாறியது. டங்ஸ்டன் சுரங்க ஏலம் விட்​டால்​கூட, அதிலிருந்து பெறப்​படும் தொகை​யில் ஒரு ரூபாய்கூட மத்திய அரசுக்கு கிடைக்​காது. மாநில அரசுக்​குத்​தான் கிடைக்​கும். எனவே, முதல்வர் சட்டப்​பேர​வை​யில் உண்மை​யைப் பேசவில்லை. தகுதியில்லாதவர் அரசாங்​கத்​தில் உயர் பதவிக்கு வந்தால், அந்த அரசு எவ்​வகை​யில் பா​திக்​கப்​படும் என்​ப​தற்கு உதயநி​தியே சான்று. இவ்​வாறு அண்​ணாமலை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்