டங்ஸ்டன் திட்டத்தை கைவிட ஆளுநரிடம் பிரேமலதா மனு

By செய்திப்பிரிவு

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை கைவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்​.ரவியிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மனு அளித்தார்.

ஆளுநரை சந்தித்த பின் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் பெண்​களுக்கு பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும். கஞ்சா, போதை கலாச்​சா​ரத்தை ஒழிக்க வேண்​டும். மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை கைவிட வேண்​டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்​துள்ளேன்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்​தில் காவல் துறை பெரிய அளவில் கவனம் செலுத்​தவில்லை. இந்த வழக்​கில் முதல் தகவல் அறிக்கையே 4 மணி நேரம் கழித்து​தான் பதிவு செய்திருப்​பதாக ஆளுநர் தெரி​வித்​தார். கைதான ஞானசேகரன் திமுக அனுதாபி என்று முதல்வரே ஒப்புக்​கொள்​ளும்​போது, அவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்​பார்​கள். ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்​டும்.

பொங்கல் தொகுப்​பில் ரூ.1,000 சேர்த்து கொடுக்​ககூட திமுக அரசால் முடிய​வில்லை. ‘தேர்தல் வரும்​போது பார்த்​துக் கொள்​ளலாம்’ என்று சட்டப்​பேர​வை​யில் வாய் கூசாமல் சொல்​கிறார் அமைச்சர் துரை​முரு​கன். அடுத்த ஆண்டு தேர்தல் வரும்​போது ரூ.1,000 கொடுத்து ஓட்டு வாங்கி வென்று மீண்​டும் ஆட்சிக்கு வந்து​விடலாம் என திமுக​வினர் மனக்​கோட்டை கட்டு​கின்​றனர். அவர்​களது எண்ணம் பலிக்​காது. மக்கள் தெளிவாக உள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டப்​பேரவை தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. எல்லா இடைத் தேர்​தல்​களை​யும் சந்தித்த ஒரே கட்சி தேமு​திக. ஆனால் தற்போது இடைத் தேர்​தல்கள் ஜனநாயக ரீதியாக நடப்​ப​தில்லை. திமுக ஆட்சி​யில் நடப்பவை அராஜக இடைத் தேர்​தலாகத்​தான் இருக்​கும். எனவே, இ​தில் தே​மு​திக நிலைப்​பாடு குறித்து ஓரிரு நாளில் அறி​விப்​போம். இவ்​வாறு கூறினார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்