அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு தமிழகம் முழுமைக்கும் ‘கரூர் டீம்’ என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் டாஸ்மாக் பார்களில் டாம்பீகம் பண்ணிக் கொண்டிருந்தது. அமைச்சர் ஜெயிலுக்குப் போனதால் ‘கரூர் டீம்’ கப்சிப் ஆனது. இப்போது மீண்டும் ‘கரூர் டீம்’ தனது ‘வழக்கமான’ வேலையில் இறங்கிவிட்டதாக பதறுகிறார்கள் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள்! டாஸ்மாக் பார்களில் அதிரடி வசூல், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் உள்ளிட்ட சமாச்சாரங்களில் கரூர் டீமின் தலை தாராளமாக உருள்கிறது.
டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் புதுப்பிக்க ‘கட்டிங்’ கேட்கும் கரூர் டீம், பார்களில் வசூலுக்கு ஏற்ப மாதா மாதம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கட்சியின் பெயரில் கப்பம் கட்டச் சொல்வதாகவும் கோவை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கதறுகிறார்கள். கேட்டதைத் தராத பார் உரிமையாளர்களை கருர் டீமின் ‘கலெக் ஷன் பாய்ஸ்’ கண்டபடி மிரட்டுவதாகவும், அந்த பார்களை டாஸ்மாக் அதிகாரிகளின் துணையுடன் பூட்டி சீல் வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இப்படித்தான், அண்மையில் கோவை காந்திபுரம் பகுதியில் பார் நடத்தும் கருப்புசாமி என்பவரை கரூர் டீம் ‘கட்டிங்’ கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஜனவரி 4-ம் தேதி கருப்புசாமி தனது ஆட்களுடன் சென்று சாய்பாபா காலனியில் உள்ள கரூர் டீமைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் ஈஸ்வரமூர்த்தி தரப்பினர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமி தரப்பைச் சேர்ந்த சிலரைக் கைதும் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சிலர், “கோவையில் உள்ள டாஸ்மாக் பார்களை ஈஸ்வரமூர்த்தியின் கரூர் டீம் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒவ்வொரு பாரிலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மாதா மாதம் கட்சிக்காக என்று சொல்லி வசூலிக்கின்றனர்.
» மலேசியா செல்லும் இந்திய பயணிகளுக்கான 30 நாட்கள் இலவச விசா 2026 டிச.31 வரை நீட்டிப்பு
» ‘புது யுக அடிமைத்தனம்...’ - எல் அண்ட் டி தலைவரின் 90 மணி நேர வேலை கருத்துக்கு சிவசேனா கண்டனம்
இதைச் சமாளிக்க முடியாமல் பார் உரிமையாளர்கள் பயந்து ஒதுங்கி நிற்கின்றனர். ஓராண்டாக இந்தக் கெடுபிடிகள் இல்லாமல் நிம்மதியாக இருந்தோம். இப்போது திடீரென மீண்டும் கட்சி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். கொடுக்க மறுத்தால் அதிகாரிகள் உதவியுடன் பார்களை பூட்டி சீல் வைத்து வேறொருவருக்கு அதை ஒதுக்கீடு செய்து விடுகின்றனர்.
அரசுக்கு செலுத்த வேண்டிய டெண்டர் தொகையை செலுத்தாமலும் ஏராளமான பார்கள் அனுமதியின்றி கரூர் பார்ட்டிகளின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது. அந்தப் பார்களிலும் கெடுபிடி வசூல் செய்கின்றனர். ஆளும் கட்சியின் ஆதரவு கரூர் டீமிற்கு இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் உள்ளோம்” என்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் எனச் சொல்லப்படும் ஈஸ்வரமூர்த்தியிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம்.
“முக்கியமான மீட்டிங் இருக்கிறது, அப்புறம் பேசுகிறேன்” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார். கரூர் டீம் ஆட்கள் கோவையில் மட்டுமல்லாது தமிழகம் முழுக்கவே இஷ்டத்துக்கு இப்படி அதிகாரம் செய்வதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்கு கடிவாளம் போடாவிட்டால் அமைச்சருக்கு மட்டுமல்ல ஆளும் கட்சிக்கும் சிக்கல் தான்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago