ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இன்று தொடங்குவதாக இஸ்ரோ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்​பேடெக்ஸ் இரட்டை விண்​கலன்​களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்​கும் என்று இஸ்ரோ அறிவித்​துள்ளது.

இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலை​யத்தை 2035-ம் ஆண்டுக்​குள் விண்​ணில் நிறுவமுடிவு செய்​துள்ளது. இதற்கான முன்னேற்​பாடுகள் தற்போது மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்​டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்​டத்​தின்​கீழ் விண்​வெளி​யில் விண்​கலன்களை ஒருங்​கிணைக்​கும் பரிசோதனையை மேற்​கொள்ள இஸ்ரோ முடிவு செய்​தது.

இதற்காக வடிவ​மைக்​கப்​பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய விண்​கலன்​களும் பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் மூலமாக ஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்டன.

இவற்றின் தூரத்தை 225 மீட்​டராக குறைக்க நேற்று முன்​தினம் முயற்சிக்​கப்​பட்​டது. அப்போது புறச்​சூழல்கள் காரணமாக விண்​கலன்​களின் இயக்​கத்​தின் வேகம் எதிர்​பார்த்​ததைவிட குறைந்​து​விட்​டது. இதனால் நேற்று திட்​ட​மிடப்​பட்​டிருந்த விண்​கலன்கள் ஒருங்​கிணைப்பு நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்​கப்​பட்​டது.

இந்நிலை​யில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்​கலன்​களின் ஒருங்​கிணைப்பு செயல்​பாடுகள் இன்று (ஜனவரி 10) தொடங்​கப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்​துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளி​யிட்ட அறிவிப்​பில், ‘இரு விண்​கலன்​களை​யும் ஒன்றுக்​கொன்று நெருக்​கமாக கொண்டு செல்​லும் பணிகள் முன்னெடுக்​கப்​பட்​டுள்ளன. ஒருங்​கிணைப்பு நடவடிக்கைகள் வெள்​ளிக்​கிழமை (இன்று) தொடங்கும். இரு விண்​கலன்​களும் பாது​காப்பாக உள்ளன”என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்