ஈரோடு கட்டுமான நிறுவனங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கட்டுமான நிறு​வனங்கள் மற்றும் தொடர்​புடைய இடங்​களில், வருமானவரித் ​துறை​யினர் 2-வது நாளாக நேற்றும் சோதனை​யில் ஈடுபட்​டனர்.

ஈரோடு பூந்​துறை சாலை​யில் உள்ள செட்​டிபாளையம் என்ற இடத்​தில் ராமலிங்கம் என்பவருக்​கு சொந்​தமான கட்டுமான நிறு​வனம் உள்ளது. இந்த கட்டுமான நிறு​வனத்​துக்கு நேற்று முன்​தினம் காலை, கோவை​யில் இருந்து வந்த வருமான வரித்​துறை​யினர் சோதனை​யில் ஈடுபட்​டனர்.

கஸ்பாபேட்டை பகுதி​யில் உள்ள ராமலிங்​கத்​தின் வீடு, முள்​ளாம்​பரப்பு பகுதி​யில் செயல்​பட்டு வரும் செல்​வசுந்​தரம் என்பவருக்கு சொந்​தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுப​திநாயக்​கன்​பாளை​யத்​தில் உள்ள அவரது வீட்​டிலும் இரண்​டாம் நாளாக வருமான வரித்​துறை​யினர் சோதனை மேற்​கொண்டு வருகின்​றனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் அம்மாப்​பேட்டை - அந்தி​யூர் சாலை​யில் பூனாச்சி அருகே​யுள்ள, மரவள்​ளிக்​கிழங்கு அரவை ஆலையிலும் இரண்​டாவது நாளாக அதிகாரிகள் சோதனை​யில் ஈடுபட்டு வருகின்​றனர். சோதனை நடந்த இடங்​களில் வெளி​யாட்கள் உள்ளே அனும​திக்​கப்​பட​வில்லை. கட்டுமான நிறுவன உரிமை​யாளர் மற்றும் மரவள்ளி அரவை ஆலை உரிமை​யாளர் ஆகியோர், எ​திர்​கட்​சித்தலை​வர் பழனிசாமி​யின் உற​வினர்​கள் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்