சென்னை: கைதிகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டிய சிறைத் துறை அதிகாரிகளே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு செய்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புழல் சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை எனக்கூறி புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். பி்ன்னர் அவர், சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக மூன்று அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக நியாயமான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
» சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கன் அணி ஆலோசகராக யூனிஸ் கான் நியமனம்!
» மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.9 - 15
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தவறு செய்தவர்களை திருத்துவதற்காக சிறைக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டிய சிறைத்துறை அதிகாரிகளே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்த உயர் அதிகாரிகள் உள்பட அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் பாரபட்சமின்றி துறை ரீதியாக இடைநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டனர். அத்துடன் இதுதொடர்பான விசாரணையை துரிதப்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வரும் ஏப்.4-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago