இபிஎஸ் உறவினரின் நிறுவனம் உட்பட 26 இடங்களில் ஐடி ரெய்டு: பறிமுதல் செய்த ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை

By செய்திப்பிரிவு

சென்னை/ஈரோடு: அ​திமுக பொதுச் செயலாளர் பழனிசாமி​யின் உறவினர் நிறு​வனம் உட்பட தமிழகம் முழு​வதும் 26 இடங்​களில் வருமான வரி சோதனை நடைபெற்​றது.

ஈரோட்டை தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர்.

ஈரோடு பூந்​துறை சாலை​யில் உள்ள செட்​டிபாளையம் என்ற இடத்​தில் ராமலிங்கம் என்பவருக்​குச் சொந்​தமான கட்டுமான நிறு​வனம் உள்ளது. இந்த நிறு​வனம் சார்​பில் தமிழ்​நாடு வீட்டு​வசதி வாரி​யம், குடிசை​மாற்று வாரி​யம், பொதுப் பணித்​துறை, காவலர் வீட்டு​வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை​களின் கட்டு​மானப் பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன.

மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்​களின் அரசுப் பணிகளை​யும் இந்த நிறு​வனம் மேற்​கொண்டு வருகிறது. இந்நிலை​யில், இந்நிறுவன அலுவல​கத்​துக்கு நேற்று காலை கோவை​யில் இருந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் குழு​வினர் சோதனை​யில் ஈடுபட்​டுள்​ளனர். ரகுபதி நாயக்​கன்​பாளையம் என்ற இடத்​தில் உள்ள இந்நிறுவன நிர்​வாகி​யின் வீட்​டிலும் சோதனை நடத்​தப்​பட்​டது.

இந்நிறு​வனம் தொடர்பாக மாநிலத்​தின் பல்வேறு பகுதி​களில் நடைபெற்ற சோதனை​யில், பணப் பரிமாற்ற விவரங்​கள், வருமானவரி செலுத்திய விவரங்கள் குறித்த ஆவணங்கள் சரிபார்க்​கப்​பட்​ட​தாக​வும், கணக்​கில் வராத சொத்து​கள், ரொக்கம் உள்ளதா என்று ஆய்வு செய்​யப்​பட்​ட​தாக​வும் வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரி​வித்​துள்ளன.

இந்நிறு​வனத்​தின் உரிமை​யாளர் தமிழக எதிர்​கட்​சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலா​ள​ருமான பழனிசாமி​யின் உறவின​ராவார். பழனிசாமி​யின் மகனும், ராமலிங்​கத்​தின் மகனும் ஒரே வீட்​டில் பெண் எடுத்து சம்பந்தம் செய்​துள்ளது குறிப்​பிடத்​தக்​கது. சென்னை ஆழ்வார்​பேட்​டை​யில் உள்ள எஸ்பிஎல் இன்ப்ரா ஸ்ட்​ரக்சர் என்ற கட்டுமான நிறு​வனம், பாலங்கள் உள்ளிட்ட கட்டு​மானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறு​வனம் வருமான வரி ஏய்ப்பு செய்​ததாக எழுந்த புகாரில், வருமான வரித்​துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். நிறு​வனத்​தின் கணக்​கு​கள், வரி செலுத்திய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்​தனர்.

இதேபோல, சென்னை சாத்​தங்​காட்​டில் உள்ள ஜே.டி. மெட்டல் நிறு​வனம் மற்றும் பூக்​கடை, திரு​வொற்றியூர் உள்ளிட்ட தமிழகம் ​முழு​வதும் 26 இடங்​களில் அதிகாரிகள் சோதனை மேற்​கொண்​டனர். இந்த சோதனை​யில் பறிமுதல் செய்த ஆவணங்​கள், ரொக்கம் குறித்து தகவல் தெரிவிக்​கப்​பட​வில்லை என்பது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்