விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுப்பதா? - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரை​யில் டங்ஸ்டன் சுரங்​கத்​துக்கு எதிராக விவசா​யிகள் நடத்திய பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்​ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரி​வித்​துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து மக்கள் சார்​பில் நடைபெற்ற பேரணிக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு கண்டனம் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அடிப்படை ஜனநாயக உரிமையான போராட்டம் நடத்த அனுமதி மறுப்​பதும், மீறி போராடி
​னால் காவல் துறையைக் கொண்டு அடக்​கு​முறையை கையாள்​வதும் ஏற்கத்​தக்​கதல்ல” என்று தெரி​வித்​துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “அமை​தியான முறை​யில் போராட்டம் நடத்​தும் விவசா​யிகளைத் தடுத்து நிறுத்த முற்​படு​வது, டங்ஸ்டன் சுரங்​கத்​தைக் கைவிடும் எண்ணம் திமுக​வுக்கு இல்லை என்ப​தையே காட்டு​கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விவசா​யிகளுடன் பேச்சு​வார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரி​வித்​துள்ளார்.

இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்​பட்​டதை கண்டித்துள்ளனர்.

அமைச்சர் ரகுபதி விளக்கம்: அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளி​யிட்ட அறிக்கை​யில், “பொது​மக்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல் துறை, சில கட்டுப்​பாடுகளை விதித்​தது. அதைத்​தான் ‘காவல்​துறை அனுமதி மறுத்​துள்ளது’ என பழனிசாமி பொய்கூறி​யுள்​ளார். தமிழக உரிமையை மத்திய அரசின் காலடி​யில் வைத்து​விட்டு, பழனிசாமி செய்த துரோகத்தை மக்கள் மறக்​க​மாட்​டார்​கள். அவர் அதிமுக பொதுச் செய​லா​ளர் என்​பதை மறந்து, பாஜக தலை​வரைப்போல செயல்​பட்டுக் ​கொண்​டிருக்​கிறார்” என்று தெரி​வித்​துள்ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்