சென்னை: ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்ட ‘இயர்புக் 2025’ புத்தகம் பற்றிய சிறப்பு பார்வை நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் இன்று (ஜன. 8) காலை ஒளிபரப்பாகிறது.
சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 8.45 மணிக்கு எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்து பேசிவருகிறார். அந்த வகையில், இன்று இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட ‘இயர்புக் 2025’ புத்தகத்தை அறிமுகம் செய்து அவர் பேசுகிறார். இந்த இயர்புக்கில் 25-க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டில் கவனம்பெற்ற 40 விஷயங்களுக்கான விரிவான விளக்கங்கள் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ பகுதியில் தொகுத்து தரப்பட்டுள்ளன. இது, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும் நூலாகும். தடம்பதித்த 50 ஆளுமைகள் குறித்த அறிமுகச் சித்திரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு தயாரிப்புக்கு உதவும் அறிவியல் கேள்வி-பதில் தொகுப்பு, தமிழின் முக்கிய நூல்களும் ஆசிரியர்களும், ரயில்வே தேர்வுகளில் வெற்றிக்கான வழி ஆகிய கட்டுரைகள் அனைவருக்கும் உதவும்.
மொத்தம் 800 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.275. இந்த நூல் சென்னை புத்தகக் காட்சியில் 55, 56, 668 மற்றும் 669 ஆகிய அரங்குகளில் கிடைக்கும். இந்நூலை ஆன்லைன் மூலம் பெற store.hindutamil.in/publications என்ற பக்கத்தில் சென்று பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 7401296562 அல்லது 7401329402 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது இணைப்பில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தும் அறிந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago