சென்னை புறநகரில் இயக்கப்பட்ட சர்குலர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை புறநகரில் காஞ்சிபுரம், அரக்கோணத்துக்கு பயணிகள் ஒரே மின்சார ரயிலில் பயணிக்க வசதியாக, சர்குலர் ரயில் சேவை கடந்த 2019-ம் தேதி இயக்கப்பட்டது. இந்த ரயில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு வரும்.
இந்த தடத்தில், இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன. அதாவது, ஒரு சர்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தினசரி காலை 9.20 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை கடற்கரையை பிற்பகல் 3.30 மணிக்கு அடைந்தது. மற்றொரு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தினசரி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரையை மாலை 4.35 மணிக்கு அடைந்தது. இந்த ரயில்கள் அனைத்து நாள்களிலும் இயக்கப்பட்டன.
இதற்கிடையே, கரோனா பாதிப்பின்போது, இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன்பிறகு, இந்த ரயில் சேவை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, இந்த ரயில் சேவை சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கவில்லை. இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: கரோனா பாதிப்புக்கு பிறகு, மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. இருப்பினும், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம்– சென்னை கடற்கரை சர்குலர் ரயில் சேவை மீண்டும் தொடங்கவில்லை. இதனால், நேரடி சேவை கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறினர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த ரயில் சேவைக்கு மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால், நிறுத்தப்பட்டது. இந்த ரயில்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக எந்த முடிவையும் ரயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. மீண்டும் இந்த ரயில்கள் இயக்கப்படுமா என்பது சந்தேகம்தான்” என்றனர். சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் உள்ளிட்ட மார்க்கங்களில் தினசரி 670 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.
இப்போது, இந்த ரயில் சேவைகள் எண்ணிக்கை 622 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள், பயணிகளிடம் வரவேற்பு குறைந்த மின்சார ரயில் சேவைகள் ஆகியவற்றை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில், சர்குலர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago