பொதுவாக, திமுக மற்றும் பாஜக ‘ஐடி விங்’கைத்தான் பவர்ஃபுல் என்பார்கள். ஆனால், ‘யார் அந்த சார்?’ விவகாரத்தை சட்டமன்றம் வரைக்கும் பேசுபொருளாக்கியதன் மூலம் அதிமுக ‘ஐடி விங்’ இப்போது திடீர் வேகமெடுத்திருக்கிறது. விவாதிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியை வேறு ரூட்டில் திருப்பி விட்டு நீர்த்துப் போகச் செய்வதையும், ஒன்றுமில்லாத செய்தியை ஊதிப் பெரிதாக்கி அரசியல் ஆதாயம் பார்ப்பதையும் தான் முக்கியக் கட்சிகளின் ‘ஐடி விங்’கில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் நினைத்தால், ‘ஒற்றை செங்கலை’யும் ஒரே நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு பேசவைத்துவிடமுடிகிறது. அந்த விதத்தில் ஆகப்பெரும் ஓட்டு வங்கியை தன் வசம் வைத்திருக்கும் அதிமுக, ‘ஐடி விங்’கின் வீச்சை தாமதமாகத்தான் புரிந்து கொண்டது. 2014-ல் தான் அதிமுக ‘ஐடி விங்’கே உருவாக்கப்பட்டது. ஆனபோதும் மற்ற கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் அதிமுக ‘ஐடி விங்’ ஸ்லீப் மோடிலேயே இருப்பதாக அதிமுக-வினரே குறைபட்டுக் கொண்டார்கள்.
‘ஐடி விங்’ ஆக்டிவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அண்மையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுவிலும், “தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்த வேண்டும். அதில், திறன் மிக்க இளைஞர்களை பொறுப்பில் நியமிக்க வேண்டும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், அதிமுக தொடர்பான பதிவுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்நிலையில் தான், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என அதிமுக ‘ஐடி விங்’ எடுத்துக் கொடுத்த ஒற்றை வரி பிரச்சாரம் அதிமுக-வுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்தப் பிரச்சாரம் குறித்து பேசிய அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன், “கிராம அளவில் கட்சியின் ‘ஐடி விங்’ பொறுப்பாளர்களை நியமிக்க பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
» கிங்ஸ்டன் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத் துறை சோதனை: பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் கடிதம்
» ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு
அதன்படி கடந்த ஓராண்டாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக தான் என்பதால் ‘ஐடி விங்’கில் தற்போது அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். கட்சியின் மற்ற அணியினரை விட ஒருபடி மேலாகவே ‘ஐடி விங்’கை உற்சாகப்படுத்தி வருகிறார் எங்கள் பொதுச்செயலாளர்.
அவரது வழிகாட்டலில் செயல்படும் எங்களின் வலிமையை. ‘யார் அந்த சார்?’ விவகாரத்தில் மக்கள் பார்த்துள்ளனர். இனி இதுபோன்ற பிரச்சாரங்களை அதிமுக ‘ஐடி விங்’ அடிக்கடி முன்னெடுக்கும்; பழனிசாமியை முதல்வராக்கும் வரை ஓயாது” என்றார். அணியின் தலைவர் கோவை சத்யனோ, “கிராம அளவில் வாக்குச்சாவடிக்கு 2 பேரை ‘ஐடி விங்’கில் இணைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஏப்ரல் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். மேலும், ஒன்றியம், மாவட்டம், நகரம் எனவும் ‘ஐடி விங்’ நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். இது போன்ற நடவடிக்கைகளால் தான் எங்களின் இணைய வலிமை இப்போது பேசுபொருளாகியுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அதிமுக ‘ஐடி விங்’ முக்கிய பங்காற்றும்” என்கிறார். பழனிசாமியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ‘ஐடி விங்’ மீண்டும் ஸ்லீப் மோடுக்கு போய்விடக் கூடாது என்பதே அதிமுக-வினரின் இப்போதைய கவலையாக இருக்கிறது!
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago