சென்னை: தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடும் ஜன. 14 உள்ளிட்ட நாட்களில் தேசிய தேர்வு முகமையால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16-ம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து மத்திய கல்வி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றியமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.7) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “இந்த ஆண்டு தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் டிச.23-ம் தேதியன்று மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
» செயற்கை நுண்ணறிவு VS இயற்கை நுண்ணறிவு | வகுப்பறை புதிது 1
» Junk சொல்லை verb ஆகப் பயன்படுத்தலாமா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 113
தமிழகத்தின் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். இதே காரணத்துக்காக ஜனவரி 2025-ல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கெனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது. அப்போதுதான், அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது.
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago