உண்​மையை பேசிய கூட்டணி கட்சி தலைவரை மிரட்டுவது அரசியல் அறமா? - திமுக​வுக்கு தமிழக பாஜக கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: உண்மையை பேசும் கூட்​ட​ணிக் கட்சித் தலைவரை மிரட்டு​வது​தான் அரசியல் அறமா என திமுக​வுக்கு, தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்​ளது.

பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிரசாத் வெளி​யிட்​டுள்ள அறிக்கை: சிந்து சமவெளி நாகரிகம் குறித்​தும், தமிழர் தம் பெரு​மையை போற்றும் கீழடி நாகரிகம் குறித்​தும் பெரு​மையோடு பேச வேண்டிய கருத்​தரங்​கில், சம்பந்தமே இல்லாமல் திமுக அரசு குறித்து முதல்வர் ஸ்டா​லின் பெரு​மையோடு பேசுவது வருத்​தம் தருகிறது.

தமிழகத்​தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும்போதெல்​லாம் வரலாற்​றைத் திருத்​திப் பேசுவதும், தங்கள் கட்சிக்கு இல்லாத பெரு​மையை, தங்கள் ஆட்சி செய்யாத செயல்களை எல்லாம் செய்​ததுபோல பொய் பேசி மாணவர்​களை​யும், இளைஞர்​களை​யும், சமுதா​யத்​தை​யும் ஏமாற்றி வருவதும் தொடர்வது தமிழகத்​துக்கு ஆபத்​தானது. தமிழகத்​தில் அறிவிக்​கப்​படாத எமர்​ஜென்​சியை பிரகடனம் செய்​து​விட்​டீர்களா என்று துணிச்​சலுடன் கேள்வி கேட்ட மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் தலைவர் கே.பால​கிருஷ்ணன், “பின்​விளைவுகள் ஏற்படும்” என்ற முரசொலி​யின் மிரட்​டலுக்கு பயப்​படாமல் உண்மையை உரக்கச் சொல்ல வேண்​டும். உண்மையை பேசும் கூட்​ட​ணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா என முதல்​வரும், முரசொலி​யும் பதில் சொல்ல வேண்​டும்.

“யார் அந்த சார்?” என்று கேள்வி கேட்டு தமிழகமே போராட்டக் களமாக மாறி​விட்ட சூழ்​நிலையில் கூட, மாணவி வன்கொடுமை சம்பவத்​தில் கருத்து தெரிவிக்​காமலும் ​போராடா​மலும் தமிழக நடிகர், நடிகைகள் மவுனமாக இருப்பது ஏன்? இவ்​வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்