காவலர் நலன் - பொதுமக்கள் நல்லுறவை மேம்​படுத்துவது எப்படி? 1,200 பக்க அறிக்கை சமர்ப்​பித்த காவல் ஆணையம்

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்​படுத்துவது தொடர்பாக 5-வது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்ளது.

காவல்​துறை​யினர், பணியிலும் பணியிடத்​தி​லும் பல்வேறு பிரச்​சினைகளை எதிர்​கொள்​கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை மேற்​கொள்ள முடி​யாமல், சோர்​வடைந்து மன அழுத்​தத்​துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ள​வும் செய்​கின்​றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்​க காவல்​துறை​யினருக்கு பல்வேறு திட்​டங்கள் கொண்டு வரப்​பட்​டுள்ளன.

அதன் தொடர்ச்​சி​யாக, ‘காவலர் - பொது​மக்​களுக்கு இடையேயான உறவை மேம்​படுத்​த​வும், காவல்​துறை பணியாளர்​களின் நலனைக் கருத்​தில் கொண்​டும், அவர்​களுக்​குத் தேவையான திட்​டங்​களை​யும், புதிய பயிற்சி முறை​களை​யும் பரிந்​துரைக்​கும் நோக்​கத்​துடனும் ‘காவல் ஆணையம்’ (5-வது) ஒன்றை முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த 2021-ல் தொடங்கினார்.

சென்னை உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைவ​ராக​வும், அலாவுதீன் ஐஏஎஸ் (ஓய்​வு), முன்​னாள் டிஜிபியான கே.ரா​தாகிருஷ்ணன், ஐபிஎஸ் (ஓய்​வு), மனநல மருத்​துவர் சி.ராமசுப்​பிரமணி​யம், முன்​னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர்கள் உறுப்​பினர்​களாக​வும், காவல்​துறை கூடுதல் டிஜிபி (தற்​போது டிஜிபி) மகேஷ்கு​மார் அகர்​வால், உறுப்​பினர்​-செயலராக​வும் நியமிக்கப்​பட்​டனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்​தில் இயங்கி வரும் இந்த காவல் ஆணையம் ‘காவல் துறையை​யும், காவலர்​களை​யும் எவ்வாறு மேம்​படுத்துவது என்பது குறித்த தகவல்களை திரட்​டியது. வாரத்​துக்கு 2 முதல் 3 நாட்கள் கூடி ஆலோசித்தது. குறிப்பாக கிராமம், நகரம், மாநகர காவல் நிலை​யங்​களின் செயல்​பாடு எவ்வாறு உள்ளது, அவற்றை மேம்​படுத்துவது எப்படி என்பது குறித்​தும் காவல் துறை அதிகாரி​களிடம் அறிக்கை பெற்று ஆராய்ந்​தது.

ஏஐ தொழில்​நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்​தில் காவலர்​களின் நலன்​களோடு, அவர்​களது பணித்​திறனை எவ்வாறு மேம்​படுத்துவது என்பது குறித்​தும் தகவல்களை திரட்டி பரிந்​துரைகளை தயார் செய்திருந்​தது. பொது மக்களிடம் போலீ​ஸார் எவ்வாறு கனிவுடன் நடந்து கொள்ள வேண்​டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

திறமையான காவலர்களை தேர்வு செய்ய தேர்வு வாரி​யத்​தில் என்ன மாற்றம் செய்ய வேண்டும். பெண் காவலர்​களின் பிரச்சினைகளை தீர்வு கண்டு, அவர்களை எவ்வாறு வளர்ச்சி அடைய செய்​வது, காவல் நிலைய மரணங்களை எவ்வாறு முற்றி​லும் தடுப்​பது, என்க​வுன்ட்டர் நிகழ்வுகள் ஆகியவை குறித்​தும் விரிவாக ஆராய்ந்து அறிக்கை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. சைபர் குற்ற தடுப்பு குறித்​தும் விளக்கி உள்ளது. காவலர்கள் முதல் டிஜிபி வரையிலான அதி காரிகள் மட்டும் அல்லாமல் மக்களிட​மும் கருத்துகளை பெற்றது.

போலீ​ஸாரின் பொறுப்பு, நற்பெயரை எவ்வாறு பெறு​வது, கடமை என்ன, பத்திரி​கை​யாளர்கள் காவல்​துறை உறவு, சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள்​வது, கண்காணிப்​பது, லாக்கப் மரணத்தை தடுப்பது என்பது உட்பட பல்வேறு காரணிகள் குறித்து விரிவாக அறிக்கை தயார் செய்து, தீர்​வு​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதன்படி 60 தலைப்பு​களில் 1,200 பக்கங்​களில் இந்த விரிவான அறிக்கை தயார் செய்து கடந்த 3-ம் தேதி அரசிடம் ஒப்படைக்​கப்​பட்​டுள்ளது. அதில், ஏற்றுக் கொள்ளக் கூடியவை குறித்து அரசு விரை​வில் உத்தரவாக பிறப்​பிக்​கும் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்