சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் ஆகியோர் நேற்று தங்களது பிறந்த நாளை கொண்டாடினர்.
இதையொட்டி சமூக வலைத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மமதா ‘தீதி’க்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். பொதுவாழ்வின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பினால் தொடர்ந்து பல நல்மாற்றங்கள் விளையட்டும். தாங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியோடும் வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பெருமதிப்புக்குரிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஐயா அவர்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago