திருநெல்வேலி: இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் கண்டன பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த கண்டன பதிவில், இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று திருநெல்வேலி மாநகர் மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற குற்றாலநாதனை போலீஸார் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் ஹைகிரவுண்ட் காவல் நிலையம் அருகில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago