நீதிபதிகளின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி: நீதிப​தி​களின் செயல்​பாடு குறித்து நுகர்​வோர் அமைப்பு​கள் கேள்வி எழுப்ப வேண்​டும் என சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வலியுறுத்​தினார்.

தமிழ்​நாடு உபயோகிப்​பாளர் பாது​காப்​புக் குழு​வின் பொன் ​விழா கருத்​தரங்கம் திருச்சி கலையரங்​கத்​தில் நேற்று நடைபெற்​றது. குழு​வின் செயலாளர் புஷ்பவனம் தலைமை வகித்​தார். தலைவர் செல்​வகு​மார் முன்னிலை வகித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சுவாமிநாதன், நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்சர் கே.என்​.நேரு, ஒடிசா உயர் நீதி​மன்ற ஓய்வு​பெற்ற தலைமை நீதிபதி முரளிதர், ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்வரண் சிங் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

விழா​வில் உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசி​யது: உயர் நீதி​மன்ற நீதிப​திகள் பலர் பதவிக்கு வந்த உடன் படாடோபங்களை எதிர்​பார்க்​கின்​றனர். நீதி வழங்​கும் கடமை மீது போதிய கவனம் செலுத்து​வ​தில்லை. என்னை கேட்​டால் நீதிப​தி​களுக்கு பிரத்யேக போலீஸ் பாது​காப்பு தேவை​யில்லை. இதன் மூலம் மனித ஆற்றல் விரயம் செய்​யப்​படு​கிறது. நீதிபதி என்பது தெய்வப் பணி என சிலர் கருதுகின்​றனர். அதுவும் பிற பணிகளைபோல விமர்​சனத்​துக்​குட்​பட்ட பணிதான்.

நீதிப​தி​யின் செயல்​பாடு: ஒரு நீதிப​தி​யின் செயல்​பாட்டை, அவர் அளித்த வழக்​கு​களின் தீர்ப்பு​களின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட முடி​யாது. ஏனெனில் ஒவ்வொரு வழக்​குக்​கும் விசாரணை உள்ளிட்ட நீதி​மன்ற நடைமுறை​களுக்கு குறிப்​பிட்ட கால அவகாசம் தேவைப்​படும். சில குற்ற வழக்​குகளை விசா​ரிக்க மிக நீண்ட காலம் தேவைப்​படும். சில நீதிப​திகள் இரவு வரை நீதி​மன்​றத்​தில் பணிசெய்​கின்​றனர். ஓரிரு மணி நேரம் மட்டும் நீதி​மன்​றத்​தில் செலவிடும் நீதிப​தி​களும் உண்டு.

நீதிப​தி​களுக்​கும் பணி நேரம் நிர்​ணயம் செய்​யப்பட வேண்​டும். நீதி​மன்ற நேரம் முடிவடை​யும் வரை நீதி​மன்​றத்​தில் இருந்து பணி செய்ய வேண்​டும். தவறு செய்​யும் நீதிப​திகள் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும். அரசி​யல்​வா​தி​கள், அரசு அதிகாரிகள் போல அவர்​களும் சோதனைக்கு உட்படுத்​தப்பட வேண்டும். உயர் நீதி​மன்ற, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களின் செயல்​பாட்டை, தீர்ப்பை விமர்​சிப்பது இந்தியா​வில் மிகவும் குறைவு. இந்த போக்கு மாற வேண்​டும். நீதிப​தி​களின் செயல்​பாட்டை, தீர்ப்பை விமர்​சிக்​கும் பணியை இதுபோன்ற நுகர்​வோர் அமைப்பு​கள், அறிஞர்கள் மேற்​கொள்ள வேண்​டும். இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்​.சுவாமிநாதன் பேசினார்.

நேரலை நல்லது: ஒடிசா உயர்​நீ​தி​மன்ற ஓய்வு​பெற்ற தலைமை நீதிபதி முரளிதர் பேசி​யது: மாறிவரும் சூழலில் நீதிப​தி​களின் செயல்​பாடு கண்காணிக்​கப்​பட்டுக் கொண்​டிருப்பதை உணர்ந்து பொறுப்பு​ணர்​வுடன் செயல்பட வேண்​டும். நீதி​மன்​றங்​களில் நடைபெறும் வழக்கு விசா​ரணை​களின்​போது நீதி​மன்​றத்​தின், நீதிப​தி​யின், வழக்​கறிஞர்​களின் செயல்​பாட்டை நவீன தொழில்​நுட்ப வளர்ச்​சி​யின் மூலம் நேரலை​யில் எங்கோ ஒரு மூலை​யில் இருந்து பொது​மக்கள் கண்காணிக்​கிறார்​கள். இது மிகவும் நல்லது. ஆட்சி​யில் உள்ளவர்​கள், அரசு துறை​யினரை கேள்​வி எழுப்புவதுபோல நீதித்​துறை மீதும் நுகர்​வோர் அமைப்பு​கள் கேள்​வி எழுப்ப வேண்​டும். இவ்​வாறுநீ​திபதி ​முரளிதர் கூறினார். இந்​நிகழ்​வில், ​மாவட்ட ஆட்சி​யர் ​மா.பிரதீப்​கு​மார், மேயர் ​மு.அன்​பழகன், ​மாநக​ராட்சி ஆணை​யர் வே.சர​வணன் உள்​ளிட்ட பலர்​ கலந்​துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்