துரைமுருகனின் கிங்ஸ்டன் கல்லூரியில் 2-வது நாளாக சோதனை: பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர்: காட்​பாடி​யில் அமைச்சர் துரை​முரு​க​னுக்கு சொந்​தமான கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி​யில் இரண்​டாவது நாளாக நேற்றும் அமலாக்​கத்​துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதற்​கிடை​யில், கல்லூரி​யில் இருந்து பெரும் தொகையை வங்கி அதிகாரிகள் உதவி​யுடன் வேனில் எடுத்து சென்​றுள்ளதாக கூறப்​படு​கிறது. மேலும், அங்குள்ள கணினி ஒன்றில் மென்​பொருள் கோளாறு ஏற்பட்​ட​தால் சோதனை பணிகள் தாமத​மாகின.

அமைச்சர் துரை​முருகன் வீடு, கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்​சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்​களில் அமலாக்​கத்​துறை அதிகாரிகள் நேற்று முன்​தினம் காலை சோதனையை தொடங்​கினர்.இதில், பூஞ்​சோலை சீனிவாசன் தொடர்​புடைய இரண்டு இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் சில ஆவணங்கள் மற்றும் ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்​யப்​பட்​டதாக கூறப்​பட்​டது. அதேநேரம், கிங்ஸ்டன் கல்லூரி​யில் மட்டும் நேற்று இரண்​டாவது நாளாக சோதனை தொடர்ந்​தது.

வீட்​டில் இருந்த ரூ.8 லட்சம்: அமைச்சர் துரை​முருகன் வீட்​டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில் வீட்​டில் பல்வேறு பகுதி​களில் ரூ.8 லட்சம் பணம் இருந்​தது. துரை​முரு​கன், அவரது மனைவி சாந்​தகு​மாரி, கதிர்​ஆனந்த் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்து வருவதுடன் ஒரு நபர் ரூ.2 லட்சம் அளவுக்​குக் கையிருப்பு தொகையாக வைத்​திருக்​கலாம் என்ப​தால் அந்த பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்​பற்​ற​வில்லை.

சோதனை​யின்​போது அமைச்​சரின் அறை மற்றும் அவரது மனைவி சாந்​தகு​மாரி​யின் அறை மட்டும் பூட்​டி​யிருந்​தது. அதன் மாற்றுச் சாவி இல்லாத நிலை​யில் இரண்டு அறைகளைச் சோதனை செய்தே தீர வேண்​டும் என அதிகாரிகள் பிடிவாதம் காட்டினர். பின்னர், அறையின் கதவை உடைத்​தாவது திறக்க வேண்​டும் என அதிகாரிகள் கண்டிப்புடன் தெரி​வித்​தனர். இதையடுத்து பூட்டுகள் உடைக்​கப்​பட்டு இரண்டு அறைகளில் சோதனை நடத்தி முடிக்​கப்​பட்​டது.

கல்லூரி​யில் நடந்த சோதனையில் அங்கிருந்த பணத்தை வங்கி அதிகாரிகள் உதவி​யுடன் சரி பார்த்​தனர். இதையடுத்து வெள்ளை வேனில் அப்பணம் எடுத்து செல்​லப்​பட்டு அமலாக்கத் துறை​யின் கணக்​கில் வரவு வைத்​துள்ளனர். அந்த பணத்​துக்கு கல்லூரி நிர்​வாகம் தரப்​பில் கணக்குகாட்​டி​விட்டு திரும்பப் பெறலாம் என்ப​தால் அந்த பணம் குறித்த விவரம் வெளி​யிட​வில்லை. மேலும் கல்லூரி​யில் உள்ள ஆவணங்கள் சோதனை செய்​யப்​பட்டு வருவதாக அதிகாரிகள் சிலர் தெரி​வித்​தனர். கல்லூரி​யில் இருந்து பெரும்​தொகையை வேனில் எடுத்து சென்​றிருப்​ப​தாகவே கூறப்​படு​கிறது. மேலும், கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி நிர்வாக கணினிகளை அமலாக்​கத்​துறை அதிகாரிகள் ஆய்வு செய்​தனர். இதில், ஒரு கணினி​யின் மென்​பொருள் கோளாறால் சோதனையில் தாமதமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்