கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி விரைவில் மலிவு விலை உணவகங்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ‘கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ கடந்த 2023, டிச.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து முனையத்தை தினந்தோறும் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் உணவகங்கள் அமைக்கப்படவில்லை. மேலும், இங்கு தற்போது செயல்படும் உணவகங்களில் காலை மற்றும், இரவு நேரங்களில், விலை அதிகமான உணவு வகைகளே விற்கப்படுகின்றன.
அதேபோல், மதியம் சாப்பாடு கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக, தக்காளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் போன்றவைதான் கிடைக்கின்றன. எனவே, இங்கு வரும் பயணிகள் சாப்பிடுவதற்கு வசதியாக, குறைந்த விலையில் உணவளிக்கும் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மலிவு விலை உணவகங்களை அமைக்க கடந்த ஜனவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
» அடுத்தது ‘வேள்பாரி’ தான்: ஷங்கர் முடிவு!
» அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் ஆங்கில பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போதுகூட, பயணிகளின் வசதிக்காக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும், எந்த முன்னேற்றமும் இல்லை.
அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி, மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். ஆனால் இதுவரை உணவகங்கள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கூறியது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களை தேர்வு செய்து தெரிவிக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வு செய்து தெரிவிக்கும் பட்சத்தில் உணவகங்கள் அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் குமார் கூறியதாவது: பேருந்து நிலையம் அனைத்து வசதிகளை கொண்டிருந்தாலும் ஒரு சில வசதிகள் இல்லாமல் இருப்பது ஏழை, நடுத்தர மக்களை பாதிப்படைய செய்கிறது. குறிப்பாக மலிவு விலை உணவகங்கள் இல்லாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பேருந்து நிலையம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், அமைச்சர் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என தகவல் மட்டுமே தெரிவித்து வருகிறார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு தற்போது செயல்படும் உணவகங்களில் விற்கப்படும் உணவு அதிக விலை கொண்டதாக உள்ளது.
தனிநபர் மட்டும் உணவு அருந்தினால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். பேருந்து கட்டணம் குறைவாக இருக்கின்ற நேரத்தில், உணவுக்காக பெரும் தொகையை செலவு செய்ய வேண்டி உள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக ஏழை, எளிய, நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தினர் பயன்படும் வகையில் மலிவு விலை உணவகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தொடங்கப்படும் உணவகங்களின் உள்ளேயே பயணிகள் அமர்ந்து உண்ணும் வகையில் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago