சென்னை: தேசத்தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்பகம் சார்பில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தலைமை வகித்து, நூலை வெளியிட்டார். தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்பையா நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினர். பின்னர், சகாயத்தின் ஆதரவற்றோருக்கான நம்பிக்கை இல்லத்தின் நிர்வாகிகளுக்கு விருதுகளும், மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மதுரையை சேர்ந்த டி.ஆர். சந்திரனுக்கு நெசவாளர் விருது, அருக்காப்பட்டி கருப்பண்ணனுக்கு விவசாயி விருது, மதுரையை சேர்ந்த மறைந்த ரவிச்சந்திரனுக்கு இயற்கைப் பாதுகாவலர் விருது, கதிர்செல்வன் மற்றும் ஜானகி ஆகியோருக்கு குழந்தைகள் பாதுகாவலர் விருது ஆகியவை வழங்கப்பட்டன.
பதிப்பாளர் கா.பாட்ஷா பேசும்போது, “கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில், ஓர் அதிகாரி சந்தித்த சவால்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. தான் செய்யக் கருதியதையும், அவற்றை யாரெல்லாம் தடுத்தார்கள் என்பதையும் சகாயம் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்.
இதுபோன்ற நேர்மையான புத்தகங்களை மிகுந்த மகிழ்ச்சியாக வெளியிடுவதுடன், வரும் காலங்களில் தொடர்ந்து வெளியிடவும் காத்திருக்கிறேன்” என்றார். நிகழ்வில், திரைப்பட இயக்குநர்கள் ராஜு முருகன், புகழேந்தி தங்கராஜ், மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், கவிஞர் நா.முத்துநிலவன், அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன், 10 ரூபாய் இயக்க நிர்வாகி நல்வினை விஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 secs ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago