அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த சில கருத்துகளை நீக்கி மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ரூ.1.10 கோடி நஷ்டஈடு கோரி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், பழனிசாமி குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறியுள்ளதாகவும், அந்த கருத்துகளை நீக்க வேண்டும் எனவும் கோரி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யுமாறு மேத்யூ சாமுவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிசாமிக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட சில கருத்துகளை நீக்கி பதில்மனு தாக்கல் செய்யப்பட்டதாக மேத்யூ சாமுவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
» பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதலில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் அணுகினால் நடவடிக்கை
அதையடுத்து நீதிபதி, மேத்யூ சாமுவேலின் பதில்மனு குறித்து பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.9-க்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago