மதுரை: ஆண்களால் பெண்களுக்கு எங்கு கொடுமை நடந்தாலும் குரல் கொடுப்போம் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெறும் பாஜக மகளிர் உரிமை மீட்பு பேரணியில் பங்கேகேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த நடிகை மற்றும் பாஜக நிர்வாகியான குஷ்பு விமான நிலையத்தில் செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குவது, கைது செய்வது தொடர்கிறது. தமிழகத்தில் 44 ஆயிரம் கோடி கல்விக்காக செலவு செய்கிறோம் என இதற்கு அவர்கள் சாட்டை எடுத்து அடிப்பார்களா..?
அண்ணா பல்கலைக்கழகத்தின் நடந்தது முதல் பிரச்சினை கிடையாது. நாங்கள் பேசும்போது அரசியல் பண்ணுகிறீர்கள் என கூறுகிறார்கள். மணிப்பூரில் எல்லை மீறி பிரச்சினை நடக்கிறது. புதுக்கோட்டையில் நடக்கும் போது ஏன் திமுக குரல் கொடுக்கவில்லை.. கன்னியாகுமரியில் நடந்த பிரச்சினையை பேசவில்லை.
மணிப்பூரில் நடந்த பிரச்சினையை தெரியாமல் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக, காங்கிரஸார் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது. இன்று கைது செய்யட்டும் பார்த்துக் கொள்வோம். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையில் பெண்கள் பாதுகாப்பு மையம் திறக்கிறீர்கள். முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்களால் கொடுமை நடந்தால் எந்த மாநிலத்தில் நடந்தாலும் குரல் கொடுப்போம். சாதி, மதம் என எதையும் சம்பந்தப்படுத்தி பார்க்கக்கூடாது.
» மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா, ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்பு
» தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறுகிறது: தமிழக அரசு அனுமதி
பெண்ணுக்கு எதிரான செயலாகதான் பார்க்க வேண்டும். அங்கு அரசியல் பண்ணக்கூடாது. விஜய் மட்டுமல்ல. எல்லோரும் குரல் கொடுக்கவேண்டும். எதிரியும், எதிரியின் நண்பனும் என்பது போல் விஜயும், பாஜகவும் இணைய வாய்ப்புள்ளதா? என்றால் இதற்கு டெல்லியில் இருப்பவர்கள் தான் பதில் கொடுக்கவேண்டும்.” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago