விஜய் கட்சி தொடங்கிய நாளில் இருந்து கும்பகோணத்தில் போட்டி போட்டுக் கொண்டு சிலர் கோஷ்டி கோஷ்டியாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு தரப்பினர் போஸ்டர் ஒட்டினால் இரண்டு நாள் கழித்து இன்னொரு தரப்பு அதே இடத்தில் போஸ்டர் ஒட்டுகிறது.
எல்லாமே பதவி படுத்தும்பாடு தான். அண்மையில் தராசுரம் தொழிலதிபர் எஸ்.பிரபாகரன் தலைமையில் தவெக-வில் இணைந்த மருத்துவர் அஜய் சர்மா, முஸ்லிம் அமைப்பு ஒன்றிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த தொழிலதிபர் டி.ஆசிப் அலி, அதிமுக-வில் இருந்து விலகி வந்த ஆர்.ஆர்.பாண்டியராஜன் உள்ளிட்டோர் தான் இப்போது மாறி நல உதவி நிகழ்ச்சிகளை நடத்தி கும்பகோணத்து மக்களை திணறடித்து வருகின்றனர்.
புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்கு மத்தியில் காலம் காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் இயங்கி வரும் தங்கதுரை, நிஜாம், ஃபெலிக்ஸ், வினோத் உள்ளிட்டவர்களும் ஏதோ தங்களது வசதிக்கேற்ப கொடி ஏற்றுதல், நல உதவிகள் வழங்குதல் என பிசியாக இயங்கி வருகின்றனர்.
» இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!
» வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
இவர்கள் அனைவருமே தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அனைவருமே தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் விஜய்சரவணனை பிரதானப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாமே பதவியைப் பிடிக்கத்தானா என தாராசுரம் எஸ்.பிரபாகரனிடம் கேட்டதற்கு, “25 ஆண்டுகளாக விஜய் ரசிகனாக உள்ளேன்.
அவர் கட்சி தொடங்கியதும் மக்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்புக் கிடைத்ததாக எண்ணி முழு நேர அரசியல்வாதியாக மாறி, கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மற்றபடி எனக்கு பதவிக்கு வரவேண்டும் என்ற உள்நோக்கமெல்லாம் இல்லை. 2026-ல் விஜய்யை முதல்வராக்குவது மட்டுமே எங்களின் ஒரே நோக்கம்” என்றார்.
இதே கேள்வியை டி.ஆசிப்அலியிடமும் கேட்டோம். “விஜய்யின் கொள்கைகள் பிடித்துப் போனதால் தவெக-வில் இணைந்தேன். மற்றபடி பதவியை எதிர்பார்த்து இந்தக் கட்சிக்கு வரவில்லை. விஜய்யை முதல்வராக்குவதற்காக அடிப்படை உறுப்பினராக இருந்து பணியாற்றத் தயாராக உள்ளேன்.
அதேசமயம் என் மீது நம்பிக்கை வைத்து விஜய் எனக்கு பொறுப்பு வழங்கினால் பொறுப்பை உணர்ந்து திறம்பட செயலாற்றுவேன்” என்று சொன்னார் அவர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட தவெக பொறுப்பாளர் ஆர். விஜய் சரவணனிடமும் இதுகுறித்து பேசினோம்.
“விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது பொறுப்பாளர்கள் அதிகம் இல்லை. இப்போது அரசியல் கட்சியாகிவிட்டதால் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டி இருக்கிறது. இந்த நியமனங்களில் பழையவர்களுக்கும் புதியவர்களுக்கும் அவரவரின் செயல்பாடுகளை வைத்து பொறுப்புகள் வழங்கப்படும். பொருளாதார பின்னணி இல்லாத போதும் இயக்கத்துக்காக உழைத்தவர்களை நிச்சயம் கட்சி கைவிட்டு விடாது” என்று சொன்னார் அவர். இது போதாதா... வந்தவர்களும் இருப்பவர்களும் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்களை ஒட்ட?
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago