அரசு ஊழியர், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: ரூ.164 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’, ‘டி’ பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பு ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-24-ம் நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின்கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் ரூ.1,000 வழங்கப்படும்.

‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்